நடிகர் துல்கர் சல்மான் தெலுங்கில் முதன்முறையாக நடித்த படம் சீதா ராமம். ஹனு ராகவபுடி இயக்கத்தில் உருவான இப்படத்தில் துல்கருக்கு ஜோடியாக மிருணாள் தாக்கூர் நடித்திருந்தார். அதேபோல் நடிகை ராஷ்மிகா மந்தனாவும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவான இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்து இருந்தார்.
கடந்த வாரத்தில் இப்படத்திற்கு போட்டியாக ரிலீசான தமிழ் படங்கள் அனைத்தும் போதிய வரவேற்பை பெறாததால், பாசிடிவ் விமர்சனங்களை பெற்ற சீதா ராமம் படத்திற்கு அதிக அளவிலான தியேட்டர்கள் தமிழகத்திலும் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதனால் இப்படம் வெளியான 5 நாட்களில் போட்ட வசூலை எடுத்து லாபக் கணக்கை தொடங்கியது.
இந்த வாரம் கார்த்தி நடித்துள்ள விருமன் படம் ரிலீசாகி உள்ள போதும், சீதா ராமம் படமும் பாக்ஸ் ஆபிஸில் மவுசு குறையாமல் வசூலித்து வருகிறது. இந்நிலையில், சீதா ராமம் படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் நிலவரத்தை படக்குழுவே வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படம் தற்போது வரை உலகம் முழுவதும் ரூ.40 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக அறிவித்துள்ளனர். விரைவில் இப்படம் 50 கோடி வசூலை தாண்டிவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... இளம் பெண்ணுடன் காருக்குள் கசமுசா... போலீசிடம் வசமாக சிக்கிய சமந்தாவின் மாஜி கணவர் நாக சைதன்யா