இப்படமும் தோல்வியைத் தழுவியதால் நடிப்புக்கு முழுக்கு போட்ட ஐஸ்வர்யா, கடந்த 5 ஆண்டுகளாக சினிமாவை விட்டு ஒதுங்கியே இருந்தார். இதன்பின் தற்போது இவருக்கு தெலுங்கு பட வாய்ப்பு ஒன்று கிடைத்துள்ளது. இப்படத்தையும் அர்ஜுன் தான் இயக்குகிறார். இதில் நாயகனாக பிரபல தெலுங்கு நடிகர் விஸ்வாக் சென் நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.