தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனான நாக சைதன்யா, தந்தையை போல் சினிமாவில் ஹீரோவாக ஜொலித்து வருகிறார். தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் இவர், நடிகை சமந்தாவை கடந்த 2017-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து நான்கே ஆண்டுகளில அவரை விவாகரத்து செய்து பிரிந்தார்.
இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் சமீபத்தில் கலந்துகொண்ட நாக சைதன்யாவிடம் தொகுப்பாளர் எப்போதாவது போலீசிடம் தப்பு பண்ணி மாட்டி உள்ளீர்களா என கேள்வியை கேட்டார். இதற்கு பதிலளித்த நாகசைதன்யா, தான் ஒருமுறை காரில் பெண்ணுடன் நெருக்கமாக இருந்தபோது வசமாக சிக்கியதாகவும், இது ஐதராபாத்தில் நடந்ததாகவும் கூறினார்.
உடனே அந்த தொகுப்பாளர், சிக்கியபோது பயமாக இருந்ததா என கேட்டதற்கு, சிக்கியபோது பயமாக இல்லை என கூறிய நாக சைதன்யா, சொல்றதுக்கு ஒரு கதையாவது ஆச்சேனு நினைச்சேன் என்று சொன்னார். அந்த காருக்குள் நான் என்ன செஞ்சேன்கிறது எனக்கு மட்டுமே தெரியும் என சிரித்தபடி கூறி உள்ளார் நாக சைதன்யா.
அவரின் இந்த பேட்டியை பார்த்த ரசிகர்கள், அந்த பெண் யாராக இருக்கும் என கேள்வி எழுப்பி வருகின்றனர். சிலரோ இந்த விஷயம் சமந்தாவுக்கு தெரியுமா என்று கேட்டு அவரை ட்ரோல் செய்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... மருதநாயகம் படத்துக்காக பேசிய டயலாக்கை முதல்முறையாக வெளியிட்டு... கமல் சொன்ன வித்தியாசமான சுதந்திர தின வாழ்த்து