நடிகர் துல்கர் சல்மான் தெலுங்கில் ஹீரோவாக அறிமுகமான படம் சீதா ராமம். ஹனு ராகவபுடி இயக்கியிருந்த இப்படத்தில் நாயகிகளாக மிருணாள் தாக்கூரும், ராஷ்மிகா மந்தனாவும் நடித்திருந்தனர். விஷால் சந்திரசேகர் இசையமைத்திருந்த இப்படம் தமிழ் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளிலும் டப்பிங் செய்து கடந்த ஆகஸ்ட் 5-ந் தேதி வெளியிடப்பட்டது.