Vanangaaan : மீண்டும் இயக்குனர் பாலா உடன் மோதலா... வணங்கான் படத்தை நடிகர் சூர்யா கிடப்பில் போட்டது ஏன்?

Published : Aug 10, 2022, 09:32 AM IST

Vanangaaan : முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்த பின் கடந்த மே மாதம் நிறுத்தப்பட்ட சூர்யாவின் வணங்கான் பட ஷூட்டிங் மீண்டும் தொடங்கப்படாததற்கான காரணம் வெளியாகி உள்ளது.

PREV
15
Vanangaaan : மீண்டும் இயக்குனர் பாலா உடன் மோதலா... வணங்கான் படத்தை நடிகர் சூர்யா கிடப்பில் போட்டது ஏன்?

நடிகர் சூர்யாவும் இயக்குனர் பாலாவும் நந்தா, பிதாமகன் போன்ற படங்களில் இணைந்து பணியாற்றி உள்ளனர். அவர்கள் இருவரும் மூன்றாவது முறையாக இணைந்த படம் தான் வணங்கான். இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். 2டி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

25

இப்படத்தின் ஷூட்டிங் கடந்த மார்ச் மாத இறுதியில் தொடங்கியது. முதல்கட்ட ஷூட்டிங்கை கன்னியாகுமரியில் நடத்தி வந்தனர். அங்கு ஒரு மாதத்திற்கு மேல் நடைபெற்ற ஷூட்டிங் கடந்த மே மாதம் திடீரென நிறுத்தப்பட்டது. நடிகர் சூர்யா - பாலா இடையே ஏற்பட்ட மோதலால் தான் ஷூட்டிங் நிறுத்தப்பட்டதாக கூறப்பட்டது. பின்னர் பாலாவுடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சூர்யா.

35

இதையடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பை ஜூலை மாதம் கோவாவில் நடத்த திட்டமிட்டு இருந்தனர். ஆனால் அந்த சமயத்தில் தனது மகளின் படிப்பு தொடர்பாக ஒரு மாதம் அமெரிக்காவிற்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டதால் வணங்கான் பட ஷூட்டிங்கை தள்ளிவைத்தார் சூர்யா. கடந்த வாரம் இந்தியா திரும்பிய அவர் விருமன் பட ரிலீஸில் தற்போது கவனம் செலுத்தி வருகிறார்.

இதையும் படியுங்கள்... சூர்யா - ஜோதிகா இடையே சண்டையா?.. திடீரென ‘ஜோ’ பெயரை நீக்கி அதிர்ச்சி கொடுத்த தேசிய விருது நாயகன்- என்ன காரணம்?

45

இது முடித்த பின்னர் அவர் முன்னதாக ஒப்புக்கொண்டதன்படி சிறுத்தை சிவா இயக்கும் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள உள்ளாராம். இப்படத்தின் ஷூட்டிங் வருகிற ஆகஸ்ட் 21-ந் தேதி தொடங்க உள்ளது. இதன் முதற்கட்ட ஷூட்டிங்கை முடித்த பின்னரே வணங்கான் படப்பிடிப்பில் சூர்யா கலந்துகொள்வார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

55

அதற்குள் சூர்யாவுக்கும் பாலாவுக்கு இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டதால் தான் வணங்கான் பட ஷூட்டிங் தள்ளிவைக்கப்பட்டதாக சோசியல் மீடியாவில் பேச்சு எழ ஆரம்பித்தது. மகளின் படிப்புக்காக சூர்யா அமெரிக்கா சென்றதால் தான் வணங்கான் பட ஷூட்டிங் தள்ளிப்போன விஷயத்தை கூறி சூர்யா ரசிகர்கள் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

இதையும் படியுங்கள்... பாட்டு போட்டு கொடுக்காமல் டிமிக்கி கொடுத்த யுவன் சங்கர் ராஜாவை கடத்திய பிரபல நடிகர்

Read more Photos on
click me!

Recommended Stories