ஜனநாயகன் இல்லேனா என்ன... பொங்கல் ரேஸில் பராசக்தியை பதம்பார்க்க வரும் புதுப்படம்..!

Published : Jan 09, 2026, 02:41 PM IST

ஜனநாயகன் திரைப்படம் பொங்கல் ரேஸில் இருந்து விலகி உள்ளதால், பராசக்தி திரைப்படத்திற்கு போட்டியாக மற்றொரு புதுப்படம் களமிறங்கி உள்ளது. அது என்ன படம் என்பதை பார்க்கலாம்.

PREV
14
Draupathi 2 joins Pongal Race

இயக்குநர் மோகன் ஜி, இளம் நடிகர் ரிச்சர்ட் ரிஷியை நாயகனாக வைத்து இயக்கி உள்ள பான் இந்தியப் படம் 'திரௌபதி 2'. நேதாஜி புரொடக்ஷன்ஸ் கீழ் சோழ சக்கரவர்த்தி, ஜி.எம் ஃபிலிம் கார்ப்பரேஷனுடன் இணைந்து தயாரித்துள்ள 'திரௌபதி 2', பதினான்காம் நூற்றாண்டில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். மலையாள நடிகை ரக்ஷணா இந்து, நடிகர்கள் நட்டி நடராஜ், ஒய்.ஜி. மகேந்திரன், நாடோடிகள் பரணி, சரவண சுப்பையா, வேல் ராமமூர்த்தி, சிராஜ் ஜானி, தினேஷ் லம்பா, கணேஷ் கௌரங், திவி, தேவயானி சர்மா, அருணோதயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

24
திரெளபதி 2

இப்படத்தில் ஒளிப்பதிவாளர்: பிலிப் ஆர். சுந்தர், எடிட்டர்: தேவராஜ், கலை இயக்குநர்: கமல்ஹாசன் ஆகியோர் பணியாற்றி உள்ளனர். "ஹொய்சாளப் பேரரசர் வீர பல்லாள மூன்றாமனின் ஆட்சி, செந்தமங்கலம் காடவராயர்களின் பாரம்பரியம் ஆகியவற்றிலிருந்து ஏகாதிபத்திய மோதல், உள்ளூர் எதிர்ப்பு மற்றும் கலாச்சாரப் புரட்சி ஆகியவற்றால் உருவான ஒரு சகாப்தத்தின் வழியாக பயணிக்கும் இப்படம் நிச்சயமாக ஒரு புதிய காட்சி அனுபவமாக இருக்கும்" என்று இயக்குநர் மோகன் ஜி கூறி உள்ளார்.

34
ரிலீஸுக்கு ரெடியான திரெளபதி 2

இப்படத்தில் ஜிப்ரான் இசையமைத்த "தாரசுகி ராம்.." என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக, இந்தப் படத்தின் முதல் பாடல் வீடியோ வெளியாகி சூப்பர் ஹிட்டானது. ஜிப்ரான், கோல்ட் தேவராஜ், மற்றும் குரு ஹரிராஜ் இணைந்து பாடியுள்ள இந்தப் பாடலை இயக்குநரே எழுதியுள்ளார். நம்பிக்கையையும் சக்தியையும் இணைக்கும் கொண்டாட்டத்தை ஒரு அலங்காரமாக அல்லாமல், ஒரு கதை சொல்லும் மொழியாக 'திரௌபதி 2'-ன் "தாரசுகி ராம்" பாடல் அமைந்துள்ளது. இரண்டு வெவ்வேறு சரணங்களைச் சுற்றி நகரும் இப்பாடல், காட்சிக்கும் உணர்வுக்கும் இடையில் சீராக பயணிக்கிறது.

44
திரெளபதி 2 ரிலீஸ் தேதி

திரெளபதி 2 திரைப்படம் இம்மாத இறுதியில் ரிலீஸ் ஆகும் என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது யாரும் எதிர்பாராத விதமாக பொங்கல் ரேஸில் களமிறங்கி உள்ளது. ஜனநாயகன் திரைப்படம் பொங்கல் ரேஸில் இருந்து விலகி உள்ளதால் திரெளபதி 2 திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இப்படம் ஜனவரி 14ந் தேதி திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. திரெளபதி முதல் பாகம் மாபெரும் வெற்றிபெற்றதால், அதன் இரண்டாம் பாகத்திற்கும் அமோக வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் பராசக்திக்கு செம டஃப் கொடுக்கவும் வாய்ப்பு உள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories