Suriya 45: 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆர் ஜே பாலாஜி படத்துக்காக; பழைய ஃபார்முக்கு திரும்பிய சூர்யா!

Published : Mar 08, 2025, 01:28 PM IST

நடிகர் சூர்யா தனது 45 ஆவது படத்தில், இரட்டை வேடங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.  

PREV
15
Suriya 45: 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆர் ஜே பாலாஜி படத்துக்காக; பழைய ஃபார்முக்கு திரும்பிய சூர்யா!

Is Suriya playing a double role in Suriya 45: கங்குவா கொடுத்த கடுமையான விமர்சனம் மற்றும் தோல்விக்கு பிறகு, இப்போது சூர்யா நடிக்கும் ஒவ்வொரு படத்தின் கதையையும் பார்த்து பார்த்து தேர்வு செய்து நடித்து வருகிறார். அப்படிதான் இப்போது இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான 'ரெட்ரோ' படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்தப் படத்தில் சூர்யாவுடன் இணைந்து பூஜா ஹெக்டே, கருணாகரன், நாசர், பிரகாஷ் ராஜ் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். வரும் மே 1 ஆம் தேதி தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இந்த படம் திரைக்கு வருகிறது.

25
சூர்யாவிற்கு ஜோடியாக த்ரிஷா நடித்து வருகிறார்:

இந்த படத்திற்கு பிறகு தனது 45ஆவது படமான 'சூர்யா45' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை இயக்குநர் ஆர்ஜே பாலாஜி இயக்கி வருகிறார். இதில், சூர்யாவிற்கு ஜோடியாக த்ரிஷா நடித்து வருகிறார். இதற்கு முன்னதாக சூர்யா மற்றும் த்ரிஷா காம்பினேஷனில் வெளியான மௌனம் பேசியதே, ஆறு, ஆயுத எழுத்து, ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

'அயன்' படத்தில் சூர்யாவுக்கு முன் நடிக்க இருந்த ஹீரோ இவரா? மிஸ் பண்ணிட்டு ஃபீல் பண்ணிய நடிகர்!

35
சூர்யா ரசிகர்களுக்கு காத்திருக்கும் புதிய அனுபவம்:

இதன் பின்னர் நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும், 'சூர்யா 45' படத்தில் ஒன்றாக இணைந்து நடிக்க உள்ளனர். இந்த படத்தில், ஷிவதா, சுவாசிகா, நட்டி, யோகி பாபு ஆகியோர் பலரும் நடிக்கின்றனர். இந்தப் படம் ஆன்மீகம் கலந்த ஒரு கதைக்களத்தில் எடுக்கப்பட்டு வருகிறது. எனவே இந்த படம் சூர்யா ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

45
சூர்யா இரட்டை வேடத்தில் நடித்த படங்கள்

சூர்யா 45-ஆவது படத்தில் வக்கீலாக நடிக்க உள்ள தகவல் ஏற்கனவே வெளியான நிலையில், இதை தொடர்ந்து அய்யனாராகவும் நடிக்க உள்ளாராம் (Is Suriya Playing Two Roles? ) . இதற்கு முன்னதாக சூர்யா ஆன்மீக கதையில் நடித்திருக்கிறாரா என்று கேட்டால் இல்லை. ஆனால் இரட்டை வேடங்கள் மற்றும் 3 வேடங்கள் கொண்ட கதைகளில் அவர் நடித்திருக்கிறார். 2016ஆம் ஆண்டு திரைக்கு வந்த 24 படத்தில் 3 வேடங்களில் நடத்திருந்தார். அதற்கு முன்னதாக 2015 ஆம் ஆண்டு திரைக்கு வந்த மாஸ் என்கிற மாசிலாமணி என்ற படத்தில் 2 வேடங்களில் நடித்திருந்தார். அதே போல, மாற்றான், 7ஆம் அறிவு, வேல், பேரழகன் ஆகிய படங்களில் டூயல் ரோலில் நடித்திருந்தார். இப்போது மீண்டும் தனது பழைய ஃபார்முக்கு திரும்பியிருக்கிறார். அதாவது இரட்டை வேடங்களில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Jyothika: பாலிவுட் போனதும் இப்படியா? படு மோசமான காட்சியில் நடித்த ஜோதிகா - எகிறும் கண்டனம்!

55
ஆன்மீக கதைக்களத்தில் சூர்யா

ஏற்கனவே இயக்குநர் ஆர்ஜே பாலாஜி, ஆன்மீக கதையை மையப்படுத்தி எடுத்த மூக்குத்து அம்மன் படம் நல்ல வரவேற்பை கொடுத்தது. இந்த படத்தின் 2ஆம் பாகத்தை தற்போது இயக்குனர் சுந்தர் சி இயக்க உள்ளார். அண்மையில் இந்த படத்தின் பூஜை பிரமாண்டமாக போடப்பட்டது.  ரூ.100 கோடி பட்ஜெட்டில் இந்த படம் எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories