Dorothy vs Meesaya Murukku 2 Day 3 Box Office : கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய டோரதி படம் மற்றும் ஹிப்ஹாப் ஆதியின் மீசைய முறுக்கு 2 திரைப்படம் ஆகியவற்றின் 3ம் நாள் வசூல் நிலவரத்தை பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் கடந்த வெள்ளிக்கிழமை மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன படங்கள் தான் டோரதி மற்றும் மீசைய முறுக்கு 2. இதில் டோரதி திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருந்தார். இப்படத்தில் ரிஷிகாந்த், சனந்த், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இதற்கு போட்டியாக வந்த மீசைய முறுக்கு 2 திரைப்படத்தை ஹிப்ஹாப் ஆதி எழுதி, இயக்கியதோடு, இப்படத்தில் ஹீரோவாகவும் நடித்திருந்தார். இப்படத்திற்கு இசையமைத்ததும் அவர்தான். இப்படத்தை சுந்தர் சி மற்றும் குஷ்பூவின் அவ்னி நிறுவனம் தயாரித்திருந்தது.
கார்த்திக் சுப்புராஜின் டோரதி திரைப்படம் சர்ச்சைக்குரிய கதைக்களத்தில் உருவாகி உள்ளதால், அதற்கு விமர்சன ரீதியாக பாராட்டுக்கள் கிடைத்தாலும், வசூலில் அதற்கான வரவேற்பு சுமாராகவே உள்ளது. டோரதி திரைப்படம் ரிலீஸ் ஆன முதல் நாளில் இந்தியாவில் மட்டும் ரூ.90 லட்சம் வசூலித்திருந்தது. பின்னர் இரண்டாம் நாள் கொஞ்சம் கூடுதலாக வசூலித்து ரூ.1.25 கலெக்ஷன் அள்ளி இருந்தது. மூன்றாவது நாள் ஞாயிற்றுக் கிழமை அப்படத்தின் வசூல் சற்று ஏற்றம் கண்டுள்ளது. நேற்று அதிகபட்சமாக ரூ.1.40 கோடி வசூலித்துள்ளது. இதன்மூலம் ஒட்டுமொத்தமாக இந்தியாவில் மட்டும் இப்படம் 3 நாட்களில் ரூ.4.15 கோடி வசூல் செய்துள்ளது.
34
மீசைய முறுக்கு 2 வசூல்
ஹிப்ஹாப் ஆதி நடித்த மீசைய முறூக்கு 2 திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டையாடி வருகிறது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்படத்திற்கு ரிலீஸ் ஆன முதல் நாளில் இந்தியாவில் மட்டும் ரூ.3.30 கோடி வசூல் செய்திருந்தது. பின்னர் இரண்டாம் நாளில் படம் பிக் அப் ஆகி ரூ.4.60 கோடி வசூல் செய்தது. முதல் இரண்டு நாட்களைக் காட்டிலும் மூன்றாவது நாளில் மீசைய முறுக்கு 2 திரைப்படம் ரூ.6.05 கோடி வசூல் செய்துள்ளது. இதன்மூலம் மூன்று நாட்களில் ரூ.16.30 கோடி வசூலை அள்ளி இருக்கிறது.
இதன்மூலம் இந்த பாக்ஸ் ஆபிஸ் மோதலில், மீசைய முறுக்கு 2 திரைப்படம் தான் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது. வருகிற வியாழக்கிழமை ஏராளமான புதுப்படங்கள் ரிலீஸ் ஆக உள்ளதால், அதனை தாண்டி டோரதி மற்றும் மீசைய முறுக்கு 2 ஆகிய இரண்டு படங்களும் தாக்குப் பிடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். அநேகமாக ஹிப்ஹாப் ஆதியின் கெரியரில் மிகப்பெரிய வெற்றிப் படமாக மீசைய முறுக்கு 2 மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம் டோரதியின் ஓட்டம் இந்த வாரத்துடன் முடிவுக்கு வர வாய்ப்பு உள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.