Karthigai Deepam Serial Twist : கார்த்திகை தீபம் சீரியலில், கார்த்தியை மறக்க வைக்க வேண்டும் என்பதற்காக ரேவதிக்கு மீண்டும் திருமணம் செய்ய முடிவு செய்கிறார் சாமுண்டீஸ்வரி. அதைப்பற்றி பார்க்கலாம்.
தமிழ் சின்னத்திரையில் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுவரும் தொடர்களில் ஒன்றாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘கார்த்திகை தீபம்’ சீரியல் உள்ளது. திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்தத் தொடரில், ஒவ்வொரு நாளும் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்து வருகிறது.
அந்த வகையில், இன்றைய எபிசோடில் பல திருப்பங்களுடன் காட்சிகள் நகர்கின்றன. சாமுண்டீஸ்வரி வீட்டில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் நேரத்தில், ரேவதி கார்த்திக்கின் புகைப்படத்தை வைத்துக்கொண்டு இருப்பதை சந்திரகலாவும் சாமுண்டீஸ்வரியும் கவனிக்கின்றனர். இதனால் சாமுண்டீஸ்வரி கோபமடைந்து சாப்பிடுவதை பாதியில் நிறுத்திவிட்டு அறைக்குள் செல்கிறாள்.
24
கார்த்திக்கு தெரியவரும் உண்மை
அவரைத் தொடர்ந்து செல்லும் சந்திரகலா, ரேவதியின் மனதில் இருக்கும் கார்த்திக் நினைவுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஒரே வழி அவருக்கு மீண்டும் திருமணம் செய்து வைப்பதுதான் என்று கூறுகிறாள். இதற்கு சாமுண்டீஸ்வரியும் சம்மதம் தெரிவிக்கிறார். இதற்கிடையில், கார்த்திக் கான்ஸ்டபிளின் மனைவி குறித்து விசாரணை மேற்கொள்ளும்போது எதிர்பாராத தகவல் ஒன்று வெளியாகிறது. சாமுண்டீஸ்வரி வீட்டில் பரமேஸ்வரி என்ற பெயரில் வேலை செய்து வருபவர்தான் கான்ஸ்டபிளின் மனைவி என்பது தெரிய வருகிறது.
34
சாமுண்டீஸ்வரியை குழப்பும் ரேவதி
மறுபுறம், ரேவதி வாந்தி வருவது போல் நடித்து சாமுண்டீஸ்வரியை குழப்புகிறாள். இதுகுறித்து சாமுண்டீஸ்வரி விசாரிக்க, குட்டி கார்த்திக் வரப்போகிறான் என்று கூறி அவளை மேலும் எரிச்சலடையச் செய்கிறாள். இதற்கிடையே சந்திரகலா, சிவனாண்டியிடம் தொலைபேசியில் பேசி சாமுண்டீஸ்வரி ரேவதிக்கு திருமணம் செய்து வைக்க ஒப்புக்கொண்ட விஷயத்தை தெரிவிக்கிறாள். இதையடுத்து இருவரும் சேர்ந்து ரேவதிக்கு திருமணம் செய்து வைக்க வயதான ஒருவரை மாப்பிள்ளையாக தேடும் திட்டத்தை தீட்டுகின்றனர்.
மற்றொரு பக்கம், பரமேஸ்வரியின் புகைப்படத்தை கார்த்திக் அனுப்பி அவரைப் பற்றி ரேவதியிடம் விசாரிக்கிறான். அதற்கு ரேவதி, பரமேஸ்வரி திருப்பதிக்கு சென்றிருப்பதாக பதிலளிக்கிறாள். ஆனால், இதில் சந்தேகம் அடையும் கார்த்திக், தனது நண்பர்களிடம் தகவலை தெரிவித்து பரமேஸ்வரியை பின்தொடரச் சொல்கிறான்.
இவ்வாறு ஒருபுறம் ரேவதிக்கு திருமணம் செய்து வைக்க சாமுண்டீஸ்வரி குடும்பம் திட்டமிட, மறுபுறம் பரமேஸ்வரி தொடர்பான உண்மையை கார்த்திக் தேடத் தொடங்கியுள்ளதால் அடுத்தடுத்த காட்சிகள் பரபரப்பாக நகர உள்ளன. ரேவதிக்கு உண்மையிலேயே மீண்டும் திருமணம் நடக்குமா? பரமேஸ்வரியின் பின்னணி என்ன? கார்த்திக்கின் விசாரணையில் சிக்கப்போவது யார்? அடுத்து என்ன நடக்கிறது என்பதை தெரிந்துகொள்ள கார்த்திகை தீபம் தொடரை மிஸ் பண்ணாம பாருங்க.