தெலுங்கில் நானி நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு ரிலீசான கேங் லீடர் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் பிரியங்கா மோகன். இதையடுத்து கோலிவுட் பக்கம் வந்த அவர், நெல்சன் - சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவான டாக்டர் படம் மூலம் தமிழில் எண்ட்ரி கொடுத்தார். இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டாகி பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்தது.