மக்கள் செல்வனை புறக்கணித்த பொன்னியின் செல்வன்...சம்பள சர்ச்சையால் நழுவிய கனவு வாய்ப்பு!

Kanmani P   | Asianet News
Published : May 22, 2022, 02:09 PM IST

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தான் முதலில் பொன்னியின் செல்வனில் நடிக்க புக் செய்யப்பட்டுள்ளார். பின்னர் இவருக்கு பதிலாக அந்த ரோலில் கார்த்தி நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

PREV
16
மக்கள் செல்வனை புறக்கணித்த பொன்னியின் செல்வன்...சம்பள சர்ச்சையால் நழுவிய கனவு வாய்ப்பு!
ponniyin selvan

இந்திய திரைப்பட இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் என சினிமாவை ஒரு ரவுண்டு வருகிறார் இவர் ஆறு தேசிய திரைப்பட விருதுகள், ஆறு பிலிம்பேர் விருதுகள் என ஏராளமான விருதுகளை வென்றுள்ளார். 2002 ஆம் ஆண்டில்இந்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது . இவர இயக்கத்தில் கடைசியாக வெளியான செக்கச்சிவந்த வானம் நல்ல ஹிட் கொடுத்தது.

26
Ponniyin Selvan

பல்வேறு ஹிட் படங்களைக் கொடுத்த மணிரத்னம்  இவர், தற்போது கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை படமாக எடுத்துள்ளார் சின்ஹா படம் இவரின் கனவு படமாகும் . பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகி உள்ள இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, சரத்குமார், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஜெயராம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

36
ponniyin selvan

இந்த பொன்னியின் செல்வன் படத்தை லைகா நிறுவனமும், மணிரத்னத்தில் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.\படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

46
vijay sethupathi

இந்நிலையில் இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருந்தது குறித்த தகவல் ஒன்று கசிந்துள்ளது. இதையடுத்து பொன்னியின் செல்வன் படத்திலும் விஜய்சேதுபதியை நடிக்கவைக்க மணிரத்னம் அழைத்துள்ளார். ஆனால் நடிகர் கேட்ட சம்பளம் தயாரிப்பு நிறுவனத்திற்கு ஒத்துவராத காரணத்தால் குறைந்த சம்பளம் பெற்றுக்கொள்ளுமாறு கூறியிருந்தனர்.  அதன்படி கொடுக்கும் சம்பளத்தில் நடிக்க மக்கள் செல்வன் சம்மதம் தெரிவித்துள்ளார்.

56
karthi

ஆனால்  செக்க சிவந்த வானம் வெற்றிக்கு மக்கள் செல்வன் தான் காரணம் என பேசப்படுவதாக கேள்விப்பட்ட இயக்குனர் கடுப்பில் இருந்ததால் விஜய் சேதுபதி நடிக்க இருந்த ரோலுக்கு பதிலாக கார்த்தியை நடிக்கவைத்துள்ளனர்.ஆனால் இந்த தகவல் விஜய் சேதுபதிக்கு படப்பிடிப்பு ஆரம்பித்த பின்னரே தெரிந்துள்ளது.

66
vijaysethupathi

உண்மையில் விஜய் சேதுபதி சினிமாவிற்கு நுழைவதற்கு முன்னர் பொன்னியின் செல்வன் நாடக கதாபத்திரம் போன்ற உடை அணிந்து தான் தனது முதல் போட்டோ சூட்டை நடத்தியுள்ளார். இந்நிலையில் இந்த நடக கதை திரைப்படமாக உருவாகையில் தன்னால் நடிக இயலவில்லை என விஜய் சேதுபதி மிகவும் வருத்தப்பட்டுள்ளதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories