அந்த விஷயம் மிகவும் பாதித்தது! 'எதிர்நீச்சல்' சீரியலில் இருந்து விலக முடிவெடுத்த ஆதிரை கூறிய ஷாக்கிங் தகவல்!

First Published | Jul 12, 2023, 4:56 PM IST

'எதிர்நீச்சல்'  சீரியலில் ஆதிரையாக நடித்து வரும் சத்யா, இந்த சீரியலில் இருந்து விலக முடிவெடுத்ததாக பேட்டி ஒன்றில் அவரே கூறியுள்ள தகவல், ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
 

ethirneechal

பெண்களை அடக்க நினைக்கும் ஆணாதிக்கம் கொண்ட ஒருவரை, தைரியமாக எதிர்க்கும் கதாநாயகியின் போராட்டத்தை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் சீரியல் 'எதிர்நீச்சல்'. சன் டிவி தொலைக்காட்சியில்,  பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. குணசேகரன், சாருமதி என்பவரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டு பெண் கேட்டு செல்லும் போது , அவர் குணசேகரன் படிக்காதவர் என்பதை சுட்டி காட்டி அவரை திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார்.
 

இதனால் படித்த பெண்ணை தான், திருமணம் செய்து கொள்ள வேண்டும் என... நினைக்கும் குணசேகரன் MBA படித்த ஈஸ்வரியை திருமணம் செய்து கொள்வது மட்டும் இன்றி, தன்னுடைய தம்பிகளுக்கு படித்த பெண்களையே திருமணம் செய்து வைத்து, அவர்களை வீட்டு வேலைகளை செய்ய வைக்கிறார். அந்த வகையில் இவர் தேடி பிடித்து தன்னுடைய கடைசி தம்பி சக்திக்கு திருமணம் செய்து வைக்கும் பெண் தான் ஜனனி. 

தரமான அரசியலுக்கு தயாராகும் தளபதி விஜய்! இரவு நேர பாடசாலை தொடங்குவது எப்போது? வெளியான சூப்பர் தகவல்!
 

Tap to resize

ஜனனி சிறு வயதில் இருந்தே ஒரு கம்பெனியை நிர்வகிக்க வேண்டும் என தன்னுடைய தந்தையால் சொல்லி சொல்லி வளர்க்கப்பட்டவர். ஆனால் குணசேகரன் சதியால் அவரின் வாழ்க்கையே கேள்விக்குறியாக மாறியது போல் உணர்கிறாள். சக்தியின் வாழ்க்கையில் இருந்து மொத்தமாக விலகி செல்ல முடிவு செய்யும் போது, அப்பத்தாவுக்காக மீண்டும் குணசேகரன் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்கிறாள். அப்பத்தாவின் பேரில், 40 சதவீத சொத்து இருப்பதால்... எதுவும் செய்ய முடியாமல் குணசேகரன் இருக்க, அந்த சொத்துக்கான விடிவை தேடி ஜனனி அலைந்து கொண்டிருப்பதை எதிர்பார்க்கமுடியாத திருப்பங்களுடன் இயக்கி கொண்டிருக்கிறார் இயக்குனர் திருச்செல்வம்.

அப்பத்தாவின் 40 சதவீத சொத்துக்களை, அடைய துடிக்கும் குணசேகரன் ஒருபுறம் தன்னுடைய பெயருக்கு மாற்றிக் கொள்ள நினைக்கும் ஜீவானந்தம் மறுபுறம் இடையில் ஆதிரையின் விருப்பம் இல்லாத திருமணத்தை அவர் ஏற்றுக்கொள்வாரா? அடிபட்டு மருத்துவமனையில் இருக்கும் அருணின் நிலை என்னவாக போகிறது என ஒவ்வொரு நாளும் இந்த சீரியல் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

24 மணிநேரத்தில் எந்த ஒரு இந்திய திரைப்படமும் செய்திடாத சாதனை படைத்த ஜவான் டீசர்!

இந்நிலையில் இந்த சீரியல் குறித்து, ஆதிரை கதாபாத்திரத்தில் நடித்து வரும் சத்யா பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசி உள்ளார்.  மாடலிங் துறையில் இருந்து தன்னுடைய கேரியரை துவங்கிய சத்யா தேவராஜ், பின்னர் சன் மியூசிக் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இதன் பின்னரே 'அருவி' சீரியலில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.
 

இந்த சீரியலில் நடிக்கும் போது, 'எதிர்நீச்சலில்' நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.  இந்த வாய்ப்பை ஏற்றுக்கொள்ள மிகவும் யோசித்துள்ளார். ஆனால் கதை பிடித்து போகவே அருவி சீரியலில் இருந்து விலகி, 'எதிர்நீச்சல்' சீரியலில் நடிக்க துவங்கினார்.  எதிர்நீச்சல், இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இவரது கல்யாண எபிசோட், இதுவரை எந்த சீரியலும்பெறாத  டிஆர்பியை கைப்பற்றி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

பாக்கிய லட்சுமி சீரியல் நடிகர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? அடேங்கப்பா இவர் தான் அதிகம் சம்பளம் வாங்குகிறாரா

மேலும் இந்த சீரியல் நடிப்பது குறித்து ஆதிரை பேட்டி ஒன்றில் பேசும் போது, ஆரம்பத்தில் எதிர்நீச்சல் சீரியலில் நெகடிவ் ரோலில் தான் காட்டப்பட்டேன். பலர் எனக்கு எதிராக விமர்சனங்களை கூறி வந்தனர். ஆனால் அதெல்லாம் எனக்கு பெரிதாக தெரியவில்லை, இந்த கல்யாண எபிசோட் ஒளிபரப்பான போது அருண் மற்றும் ஆதிரையின் காதலை எப்படியாவது முடித்து விடுங்கள் என பல கூறியது மனதை மிகவும் பாதித்தது. இதனால் இந்த சீரியலில் இருந்து விலகிவிடலாம் என்று கூட யோசித்தேன். பின்னர் பலரும் என்னை சமாதானப்படுத்தி தொடர்ந்து நடிக்கச் செய்தனர். அதற்கு ஏற்றவாறு தற்போது தன்னுடைய கதாபாத்திரத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. பலர் என்னிடம் வந்து மிகவும் ஆறுதலாகவும் ஆதிரை என அழைத்து பேசுவது சந்தோஷமாக உள்ளது என தெரிவித்துள்ளார். ஒரு வேலை சீரியலில் இருந்து விலகி இருந்தால் முட்டாள்தனம் செய்தது போல் உணர்ந்திருப்பேன் என கூறியுள்ளார். 

Latest Videos

click me!