தளபதி விஜய் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வந்த 'லியோ' படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த நிலையில், நேற்று திடீர் என விஜய் மக்கள் இயக்க மாவட்ட பொறுப்பாளர்களை சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சந்திப்பின் போது, விஜய் முழுக்க முழுக்க அரசியல் நோக்கத்தில் மட்டுமே மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்ததாக கூறப்படுகிறது.
விஜய்யின், சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சில நிர்வாகிகள் விஜய் பேசியது குறித்து மீடியாக்களிடம் பகிர்ந்து கொண்டனர். இந்த சந்திப்பில் விஜய் அரசியலில் இறங்குவது என்றால், திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என்று கூறியதாகவும், தொடர்ந்து அரசியலில் மட்டுமே ஈடுபடுவேன் என தெரிவித்துள்ளதாக கூறியுள்ளனர். மேலும் நடிகர் விஜய்யின் அரசியல் வருகைக்கான அனைத்து கட்டமைப்புகளும் தயாராக உள்ள நிலையில். அவர் கைகாட்டியதும் அரசியலில் ஈடுபடுவோம், என மாவட்ட பொறுப்பாளர்கள் உற்சாகமாக தெரிவித்தனர்.
புகுந்த வீட்டில் சுயரூபத்தை காட்டிய நிஹாரிகா! இப்படி எல்லாம் செய்தாரா... விவாகரத்தின் காரணத்தை உடைத்த மாமனார்?
அதே போல் விஜய் எப்போது அரசியலுக்கு வந்தாலும் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறோம் என்றும் அரசியலைப் பொருத்தவரை அஜித், ரஜினி, ரசிகர்கள் என அனைத்து ரசிகர்களின் ஆதரவும் எங்களுக்கு இருக்கிறது என்றும் கூறி உள்ளனர். தளபதியின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியது.
இது ஒருபுறம் இருக்க , தளபதி விஜய் பிறந்தநாள் அன்று விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகி புஸ்ஸி ஆனந்த், பேட்டி ஒன்றை கொடுத்தார். அப்போது, 'விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் விரைவில் இரவு நேர பாடசாலை தொடக்கப்படும் என்று தெரிவித்தார்'. இந்த பாடசாலை மூலம், பள்ளி சென்று படிக்க முடியாத ஏழை எளிய மாணவர்கள் இலவசமாக இரவு நேரத்தில் கல்வி பயின்று பயனடையும் விதத்தில் இந்த பாடசாலைகள் துவங்க உள்ளதாக அறிவித்தார்.