அரசியல் கனவில் இருக்கும் விஜய்யை முதல்வனாக்க பிளான் போடும் ஷங்கர்? 11 ஆண்டுகளுக்கு பின் இணையும் மாஸ் கூட்டணி

Published : Jul 12, 2023, 01:51 PM IST

நண்பன் படத்தின் ஷங்கருடன் இணைந்து பணியாற்றிய விஜய், அதன்பின் 11 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது மீண்டும் இணைய உள்ளாராம்.

PREV
14
அரசியல் கனவில் இருக்கும் விஜய்யை முதல்வனாக்க பிளான் போடும் ஷங்கர்? 11 ஆண்டுகளுக்கு பின் இணையும் மாஸ் கூட்டணி
Vijay, Director Shankar

நடிகர் விஜய் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் உருவாகி இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தை செவன் ஸ்கீரின் நிறுவனம் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். திரிஷா, அர்ஜுன், கவுதம் மேனன், மன்சூர் அலிகான், மிஷ்கின், பிரியா ஆனந்த், சஞ்சய் தத், அனுராக் கஷ்யப் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். வருகிற அக்டோபர் மாதம் லியோ படம் திரைக்கு வர உள்ளது.

24
Vijay, Director Shankar

லியோ படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் உருவாக உள்ள திரைப்படம் தளபதி 68. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்க உள்ளார். ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. வருகிற ஆகஸ்ட் மாதம் முதல் தளபதி 68 படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படியுங்கள்... ஜெயிலர் படத்தில் சூப்பர்ஸ்டாருக்கு ஸ்டண்ட் மாஸ்டராக இருந்தது இந்த சின்ன பையனா! யார் இந்த கெவின் குமார்?

34
Vijay, Director Shankar

தளபதி 68 படத்திற்கு பின்னர் விஜய் அரசியலில் நுழைய உள்ளதால் அதுவே அவரது கடைசி படமாக இருக்கக்கூடும் என்றும் கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது திடீர் சர்ப்ரைஸாக ஷங்கர் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. ஏற்கனவே ஷங்கர் இயக்கத்தில் விஜய் நண்பன் படத்தில் நடித்துள்ள நிலையில், தற்போது 11 ஆண்டுகளுக்கு பின்னர் அந்த கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.

44
Vijay, Director Shankar

அண்மையில் விஜய்யை சந்தித்த ஷங்கர், அவரிடம் அரசியல் திரில்லர் கதை ஒன்றை சொன்னதாகவும், அது விஜய்க்கு பிடித்துப்போனதால் அவரும் ஓகே சொல்லி உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றன. அரசியல் திரில்லர் கதை என்றால் அது முதல்வன் படத்தின் இரண்டாம் பாகமாக இருக்குமா என்கிற கேள்வியும் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது. ஏனெனில் முதல்வன் படத்தில் முதலில் நடிக்க இருந்ததே விஜய் தான். பின்னர் அவர் நோ சொன்னதால் தான் அர்ஜுனை வைத்து இயக்குனர் ஷங்கர் அப்படத்தை எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... என் பாடல் வரிக்கா கத்திரி போடுறீங்க! சென்சார் போர்டுக்கே தண்ணி காட்டி.. நா.முத்துக்குமார் செய்த தரமான சம்பவம்

Read more Photos on
click me!

Recommended Stories