மகன் குகன் தாஸ் பிறந்து 2 ஆண்டுகள் ஆகும் நிலையில், இன்று அவரது இரண்டாவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். மகனின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக, ‘ஹாப்பி பர்த்டே டா தம்பி’ என குறிப்பிட்டு, தன் மனைவி, மகள் மற்றும் மகனுடன் எடுத்த கியூட்டான பேமிலி போட்டோக்கள் சிலவற்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் சிவகார்த்திகேயன். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் செம்ம கியூட்டாக இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.