ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்தின் மகனாக முதலில் நடிக்க இருந்தது இவரா? சூப்பர் வாய்ப்பை மிஸ் செய்த பிரபலம்!

First Published | Aug 16, 2023, 9:28 PM IST

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், சமீபத்தில் வெளியான 'ஜெயிலர்' படத்தில், ரஜினிகாந்தின் மகனாக முதலில் நடிக்க இருந்த பிரபலம் குறித்த தகவல், தற்போது வெளியாகி உள்ளது.
 

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் 'பீஸ்ட்' படத்தின் தோல்விக்கு பின்னர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இயக்கிய திரைப்படம் 'ஜெயிர்'. 'பீஸ்ட்' பட தோல்வியால் நெல்சன் ஒரு சில விமர்சனங்களுக்கு ஆளானது மட்டுமின்றி, சில இடங்களில் இவர் புறக்கணிக்கப்பட்டதாக சர்ச்சைகள் எழுந்த நிலையில் தன்னுடைய திறமையை நிரூபிக்க வேண்டும் என்கிற கட்டாயத்தில் 'ஜெயிலர்' படத்தை இயக்கி முடித்தார்.

அதேபோல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தர்பார், அண்ணாத்த, போன்ற படங்கள் அடுத்தடுத்து தோல்வியை தழுவியது. எனவே தரமான கம்பேக் கொடுக்க நினைத்த ரஜினிகாந்துக்கு இப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்துள்ளது. 'ஜெயிலர்' திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியானதில் இருந்தே, உலகம் முழுவதும் உள்ள தலைவரின் ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர்.

இந்திய குடியுரிமை பெற்றுவிட்டேன்! சுதந்திர தினத்தில் அக்ஷய் குமார் பகிர்ந்த மகிழ்ச்சியான தகவல்!

Tap to resize

Jailer

குறிப்பாக ரஜினியின் மாஸ் நடிப்பை எதிர்பார்க்கும் ரசிகர்களுக்கு இப்படம் மிகப்பெரிய விருந்தாக அமைந்துள்ளது. இந்த படத்திற்கு எதிராக சில நெகட்டிவ் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட போதிலும், வெறும் 6 நாட்களில் 'ஜெயிலர்' சுமார் 400 கோடி வசூல் கிளப்பில் இணைந்துள்ளது. மேலும் இந்த படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர், நடிகைகளும், கவனிக்கப்படும் பிரபலங்களாக மாறி உள்ளனர்.
 

அந்த வகையில் ரஜினிகாந்தின் மகனாக நடித்துள்ள வசந்த் ரவி சில நிமிடங்கள் மட்டுமே இப்படத்தில் வந்தாலும், அவருக்கு இப்படம் நல்ல பெயரை பெற்றுக் கொடுத்துள்ளது. இந்நிலையில் ரஜினிகாந்தின் மகனாக 'ஜெயிலர்' படத்தில் முதலில் நடிக்க இருந்த பிரபலம் குறித்த தகவல், தான் தற்போது வெளியாகி உள்ளது.

இமயமலையில் ஆன்மீக யாத்திரை முடிந்தது..! சென்னைக்கு திரும்பிய ரஜினிகாந்த்! வைரலாகும் புகைப்படங்கள்!

அதன்படி வசந்த் ரவிக்கு பதிலாக இயக்குனர் நெல்சன் திலீப் குமார், இந்த படத்தில் நடிகர் ஜெய்யை தான் முதலில் நடிக்க வைக்க முடிவு செய்ததாகவும், ஆனால் ஒரு சில காரணங்களால் ஜெய் இந்த படத்தில் நடிக்க முடியாத நிலையில்... அதன் பின்பே வசந்த் ரவிக்கு இந்த வாய்ப்பு சென்றுள்ளது.

வசந்த் ரவி தற்போது அடுத்தடுத்து ஹீரோ சப்ஜெக்ட் படங்களை தேர்வு செய்து நடித்து வந்தாலும், ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் உடன் நடிக்கும் ஒரு நிமிட காட்சியாக இருந்தாலும் அந்த வாய்ப்பை மிஸ் செய்து விட கூடாது என இந்த வாய்ப்பை ஏற்று நடத்துள்ளார். தற்போது இந்த தகவல் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

சன் டிவிக்கு தயாரான சூப்பர் ஹிட் சீரியல்..! சமயம் பார்த்து தட்டி தூக்கிய விஜய் டிவி! எந்த தொடர் தெரியுமா?
 

Latest Videos

click me!