பயங்கரமான கைதிகளுக்கு நடுவே இருக்கும் ஆர்யன் கான்! ஜெயிலில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்! என்னென்ன தெரியுமா?

First Published | Oct 17, 2021, 6:17 PM IST

தற்போது சிறையில் இருக்கும் ஆர்யன் கானுக்கு (Aryan khan) ஜெயிலில் (Jail) இவருக்கு  போடப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் என்னை என்பதை பார்ப்போம்...

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருகானின் மகன் ஆர்யன் கான், போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு ஆர்தர் சாலை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் உள்ள தனது மகனின் நிலையை பார்த்து ஷாருக்கான் மிகவும் வேதனையில் உள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. மகனை ஜாமீனில் கொண்டு வர பல  முயற்சிகள் செய்தும், ஆர்யன் கானுக்கு  ஜாமீன் கிடைக்கவில்லை.

ஆர்யன் கானின் ஜாமீன் மனு மீண்டும் அக்டோபர் 20 ஆம் தேதி அன்று விசாரணைக்கு வர உள்ளது. அதுவரை அவர் சிறையில் இருப்பதை தவிர வேறு வழி இல்லை. மேலும் தந்தை ஷாருகான் மற்றும் தாய் கௌரி கானிடம், ஆர்யன் வீடியோ அழைப்பில் பேசிக்கொண்டதாகவும் கூறப்பட்டது.

Tap to resize

தற்போது சிறையில் இருக்கும் ஆர்யன் கானுக்கு ஜெயிலில் இவருக்கு  போடப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் என்னை என்பதை பார்ப்போம்...  மற்ற கைதிகளைப் போலவே ஆர்யன் கான் நடத்தப்படுகிறார். ஒரு சூப்பர் ஸ்டாரின் மகனாக இருந்தாலும், அவருக்கு என எந்த ஒரு தனி வசதியம் வழங்கப்படவில்லை.

ஆர்தர் சாலை சிறையில் தற்போது சுமார் 3200 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர், அவர்களில் பலர் பல பயங்கரமான விஷயங்களுக்காக கைது செய்யப்பட்டவர்கள். இவர்களுக்கு நடுவே தான் ஆர்யன் தான் தன்னுடைய ஒவ்வொரு நாளையும் கழித்து வருகிறார்.

சிறை உணவுவுகளை ஆர்யன் கான் தவிர்த்து வருவதால், சிறை கேண்டீனில் இருந்து பணம் கொடுத்து உணவு வாங்குவதற்காக ஆர்யனுக்கு ரூ. 4500 பண மணி ஆர்டர் செய்யப்பட்டது. சிறைச்சாலை விதிகளின்படி, அங்குள்ள கைதிகளுக்கு மணியார்டர் மூலம் மட்டுமே பணம் அனுப்ப முடியும், அதுவும் அதிக பட்சம் 4500 மட்டுமே அனுப்ப முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

காலை 6 மணிக்கு அனைவருடனும் எழுந்திருக்க வேண்டும் மற்றும் காலை 7 மணிக்கு காலை உணவு வழங்கப்படுகிறது. அவர்கள் மாலையில் தங்கள் முகாமுக்குத் திரும்ப வேண்டும். இடையில் கொடுக்கப்படும் சில வேலைகளையும் செய்ய வேண்டும், என ஆரியனுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதே நேரத்தில், ஆரியனுக்கு கைதி எண் கொடுக்கப்பட்டுள்ளது. N956 என்ற எண் வழங்கப்பட்டாலும், தற்போது, ​​அவர் சிறையில் தனது சொந்த ஆடைகளை அணிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!