KBC சீசனில் இதுவரையில் கேட்கப்பட்ட 5 கடினமான கேள்விகள் தெரியுமா?

First Published | Aug 28, 2024, 11:32 AM IST

Kaun Banega Crorepati சீசனை நடிகர் அமிதாப் பச்சன் வெற்றிகரமாக தொகுத்து வழங்குகிறார். இதுவரையில் KBC-யில் கேட்கப்பட்ட மிகக் கடினமான கேள்விகளும் அதற்கான பதில்களும் இங்கே பார்க்கலாம்.
 

சின்னத்திரையில் புகழ் பெற்ற ' கோன் பனேகா குரோர்பதி' நிகழ்ச்சியின் மூலம் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தன்னுடைய தனித்திறமையை மீண்டும் இந்த நிகழ்ச்சியில் நிரூபித்தார். இந்த நிகழ்ச்சிக்கான TRB ரேட்டிங் யாரும் தொடமுடியாத உச்சத்தில் உள்ளது. அண்மையில் கே.பி.சி சீசன் 16 நடைபெற்று முடிந்துள்ளது. அத்தனை சீசன்களையும் அமிதாப் பச்சனே தொகுத்து வழங்கியிருக்கிறார்.

KBC சீசனில் இதுவரையில் கேட்கப்பட்ட கடினமாக கேள்விகள் உங்களுக்கு தெரியுமா? முடிந்தால் பதில்களை அளிக்க நீங்களும் முயற்சி செய்து பாருங்களேன். தெரியாதவர்கள் பதில்களை இங்கேயே படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

இவர்களில் ஒருவர் நாடாளுமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்க இந்திய அரசியலமைப்புச் சட்டம் அனுமதிக்கிறது?
The Indian Constitution allows one of these to participate in Parliamentary proceedings. Who?

சொலிசிட்டர் ஜெனரல்
அமைச்சரவை செயலாளர்
அட்டர்னி ஜெனரல்
தலைமை நீதிபதி

இந்த கேள்வி கேபிசி-யின் முதல் சீசனில் கேட்கப்பட்டது. இதன் சரியான பதில் 'இந்திய அட்டர்னி ஜெனரல்'.

Tap to resize

அக்டோபர் 18, 1868 அன்று நிக்கோபார் தீவுகளின் உரிமைகளை ஆங்கிலேயர்களுக்கு விற்றதன் மூலம் எந்த காலனித்துவ ஆட்சி இந்தியாவில் தனது தலையீட்டை முடிவுக்குக் கொண்டு வந்தது?
Which colonial power ended its involvement in India by selling the rights of the Nicobar Islands to the British on October 18, 1868?

பெல்ஜியம்
இத்தாலி
டென்மார்க்
பிரான்ஸ்

2011ல் நடைபெற்ற கேபிசி சீசனில், ரூ.5கோடி வெற்றிக்கான கேள்வியாக இது கேட்கப்பட்டது. இதன் சரியான பதில் 'டென்மார்க்'

1972-ல் இந்திரா காந்திக்கும் சுல்பிகர் அலி பூட்டோவுக்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தோ-பாக் பேச்சுவார்த்தை சிம்லாவில் எந்த இடத்தில் நடைபெற்றன?
The Historic Indo-pak talks of 1972 between Indira Gandhi and Zulfikar Ali Bhutto were held at which place in Shimla?

வைஸ்ரீகல் லாட்ஜ்
கோர்டன் கோட்டை
பார்ன்ஸ் நீதிமன்றம்
சிசில் ஹோட்டல்

கேபிசி 12வது சீசனில் ரூ.7 கோடி வெற்றிபெருவதற்கான கேள்வியாக இது கேட்கப்பட்டது. இதன் சரியான விடை, 'பார்ன்ஸ் நீதிமன்றம்(Barnes court)'

Rs.25லட்சம் to Rs.5 கோடி! - KBC Season 16க்கு அமிதாப் பச்சன் சம்பளம்!

பி.ஆர்.அம்பேத்கர் 1923-ல் தன் எந்த பேப்பரை முனைவர் பட்டத்திற்காக LSEஇக்கு சமர்பித்தார்?
What was the title of the PhD thesis that B.R. Ambedkar submitted to LSE in 1923?

இந்தியாவின் தேவை மற்றும் ஆண்கள்
இந்திய ரூபாயின் சிக்கல்
இந்தியாவின் தேசிய ஈவுத்தொகை
சட்டம் மற்றும் வழக்கறிஞர்கள்

2021ல் கேபிசி 13வது சீசனில் இக்கேள்வி கேட்கப்பட்டது. இதன் சரியான பதில் 'இந்திய ரூபாயின் சிக்கல்'

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லீனா காடே, பின்வரும் எந்த பந்தயத்தில் வெற்றி பெற்ற முதல் பெண் ரேஸ் இன்ஜினியர்?
Leena Gade, a person of Indian origin, is the first female race engineer to win which of the following races?

இந்தியானாபோலிஸ் 500
24 மணிநேரம் லீ மான்ஸ்
12 மணி நேரம் செபிரிங்
மொனாக்கோ கிராண்ட் பிரிக்ஸ்

கேபிசி 15வது சீசனில் ரூ.7 கோடிக்கான வெற்றிக் கேள்வியாக இது கேட்கப்பட்டது. போட்டியாளர் '24 மணிநேரம் லீ மான்ஸ்' என சரியான பதிலைக் கூறி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!