பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும் பிரியா பவானி ஷங்கர்..! தீயாக பரவும் தகவல்..!

First Published | Oct 17, 2021, 7:21 PM IST

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகையான, ப்ரியா பவானி ஷங்கர் (Priya Bhavani Shankar) பிக்பாஸ் சீசன் 5 (Biggboss Seasson 5) நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் தற்போது வைரலாகி வருகிறது.

விஜய் டிவி தற்போது பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பல கோடி மக்கள் பார்த்து வருவதோடு, யார் பிக்பாஸ் போட்டியில் வெற்றிபெற தகுதியானவர்கள் என்பதை தங்களுடைய வாக்குகள் மூலம் கணிக்கவும் துவங்கி விட்டனர்.

விறுவிறுப்பாக இந்த நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கும் நிலையில், தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி பிக்பாஸ் வீட்டிற்குள் பிரபல நடிகை ப்ரியா பவானி ஷங்கர் செல்ல உள்ளாராம்.

Tap to resize

ஆனால் போட்டியாளராக அவர் உள்ளே செல்லவில்லை, இவர் ஹரீஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்துள்ள 'ஓ மணப்பெண்ணே' படத்தின் புரோமோஷனுக்காக தான் செல்ல உள்ளார்.

இயக்குனர் ஏ.எல்.விஜய்யிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த கார்த்திக் சுந்தரம் இயக்குனராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் 'ஓ மண பெண்ணே'.  இந்து திரைப்படம் கடந்த 2011ஆம் ஆண்டு நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ரீத்து வர்மா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற 'பெல்லி சூப்புலு திரைப்படத்தின் ரீமேக் ஆக எடுக்கப்பட்டு எடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர், மற்றும் லிரிகள் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், விரைவில் வரும் 22 ஆம் தேதி இந்த படமும் ரிலீசாக உள்ளது.

இந்த படத்தின் புரமோஷனுக்காக தான் தற்போது ப்ரியா பவானி பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல உள்ளார். இவருடன் ஹரீஷ் கல்யாணம் செல்ல வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

Latest Videos

click me!