
ரஜினிகாந்த் என்றவுடன், பலருக்கும் முதலில் நினைவுக்கு வருவது அவரது ஸ்டைல் தான். உலக அளவில் இவரின் தனித்துவமான ஸ்டைலுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. சமீபத்தில் தன்னுடைய 74-ஆவது பிறந்தநாளை கொண்டாடிய ரஜினிகாந்த், தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் 'கூலி' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஜெய்ப்பூரில் நடந்து வருகிறது. மேலும் அமீர் கானுடன் ரஜினிகாந்த் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுத்திகிறது.
மேலும் இந்த படத்தில் நடிகர் நாகார்ஜுனா, சௌபின் ஷஹீர், உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், ரெபே மோனிகா ஜான், சுதீப் கிஷன் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். தங்க கடத்தலை மையமாக வைத்து இந்த படத்தை லோகி இயக்கி வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் தான், டிசம்பர் 12-ஆம் தேதி தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு, படக்குழு இந்த படத்தில் இடம்பெற்றுள்ள 'சிக்கிட்டு' என்கிற பாடலின் புரோமோ வீடியோவை வெளியிட்டது.
அமரன் பிளாப் ஆகிடுமோனு பயந்தேன்; ரோல்மாடலாக இருந்த பாலா - நெகிழ்ந்த சிவகார்த்திகேயன்
வழக்கம் போல் தன்னுடைய மேஜிக்கல் இசையால் ரசிகர்களை பரவசம் செய்திருந்தார் அனிருத். அதே போல் தலைவரும் 300 நடன கலைஞர்கள் முன் கெத்தாக ஆடிய கர்சீப் டான்ஸ் செம்ம வைப்பாக இருந்தது.
'கூலி' படத்தில் ரஜினிகாந்தின் டான்ஸை பார்த்த பல ரசிகர்கள், இவருக்கு 74 வயது என்று சொன்னால் யார் நம்புவார்கள் என ஆச்சர்யப்பட்டு கமெண்ட் போட்டிருந்தனர். சினிமாவில் அறிமுகமாகும் பொது எப்படி ஒரு துடிப்பான நடிப்பை ரஜினியிடம் பார்க்க முடிந்ததோ... அதே நடிப்பை 45 வருடங்கள் கடந்த பின்னரும் மெயின்டெயின் செய்து வருகிறார் ரஜினிகாந்த்.
புஷ்பா 2 : கூட்ட நெரிசலில் சிக்கிய சிறுவன் மூளைச்சாவு; மீண்டும் கைதாகிறாரா அல்லு அர்ஜூன்?
இவர் இந்த வயதிலும், சுறுசுறுப்பாகவும்... உடலளவிலும் மனதளவிலும் - உடல் அளவிலும் ஆரோக்கியமாக இருக்க காரணம், அவரின் வாழ்க்கை முறை தான். ஒரு காலத்தில் மதுக்குவுக்கு அடிமையாகி பாக்கெட் பாக்கெட்டாக சிகரெட் பிடித்த இவர், தன்னுடைய உடல் நிலையை கருத்தில் கொண்டு அதன் பக்கமே தலை வைப்பது இல்லை. முடிந்தவரை சினிமாவில் கூட இது போன்ற காட்சிகளை தவிர்த்து விடுகிறார்.
மேலும் தன்னுடைய உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள, தினமும் அரைமணிநேரமாவது எளிமையான யோகா செய்யும் ரஜினிகாந்த், அரை மணிநேரம் நடை பயிற்சி செய்கிறார். இவருக்கு தன்னுடைய பண்ணை வீட்டில் செடிகளை பராமரித்து கொண்டு, அவற்றை பார்த்து கொண்டே நடப்பது மிகவும் பிடிக்கும். எனவே தான் ஷூட்டிங் இல்லாத நாட்களில், பெரும்பாலும் தன்னுடைய பண்ணை வீட்டுக்கு குடும்பத்தினரோடோ அல்லது தனியாக சென்று விடுவார்.
மேலும் தன்னுடைய உணவில், ஃபாஸ்ட் ஃபுட், சீஸ், மயோனைஸ், அசைவ கொழுப்புகள் உணவுகள், வெள்ளை சர்க்கரை, வெள்ளை உப்பு, செயற்கை இனிப்புகள் போன்றவற்றை முற்றிலும் தவிர்க்கிறார். குறிப்பாக சோடியம் நிறைந்த உணவுகளை அவர் எடுத்துக்கொள்ளாமல் இருப்பதன் மூலம் ரத்த அழுத்தம் சீராக உள்ளது.
தன்னுடைய உணவில், பழங்கள், காய்கறிகள், புரோட்டீன் நிறைந்த உணவுகளை எடுத்து கொள்கிறார். சரியான நேரத்தில் தன்னுடைய உணவு மற்றும் உறக்கத்தை பராமரிக்கிறார். மனதை தெளிவாகவே வைத்து கொள்ள தினமும் தியானம் மேற்கொள்ளும் ரஜினிகாந்த், ஷூட்டிங் இல்லாத நாட்களில் வெள்ளை நிற உடைகளை மட்டுமே விரும்பி அணிகிறார். இது போன்ற விஷயங்கள் தான் ரஜினிகாந்தை 74- வயதிலும் பலரும் விரும்ப கூடிய ஒரு மனிதராக இவரை மாற்றியுள்ளது.
காமெடியால் உயர்ந்து; குடியால் மாண்ட நடிகர் சந்திரபாபுவின் வாழ்க்கை வரலாறு படமாகிறது!