நடிகை நயன்தாரா, தனது நீண்ட நாள் காதலனான விக்னேஷ் சிவனை நேற்று திருமணம் செய்துகொண்டார். 20 சிவாச்சாரியார்கள் வேதமங்கலம் முழங்க இந்து முறைப்படி கோலாகலமாக நடைபெற்ற இந்த திருமண விழாவில் கோலிவுட் முதல் பாலிவுட் வரை ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
நடிகை நயன்தாராவின் திருமணத்திற்காக மகாபலிபுரத்தில் எழில்கொஞ்சும் கடற்கரையோரம் அமைந்துள்ள பிரம்மாண்டமான நட்சத்திர ஓட்டல் முழுவதும் 3 நாட்களுக்கு புக் செய்யப்பட்டு இருந்தது. இதற்கான அவர்கள் கொடுத்த வாடகை மட்டும் கோடிக்கணக்கில் இருக்கும் என சொல்கிறார்கள். இதுதவிர கல்யாணத்துக்காக கடற்கரையோரம் கண்ணாடியால் பிரம்மாண்ட செட் ஒன்றும் போடப்பட்டிருந்தது.
மேலும் இவர்களது திருமணம் முடிந்ததும் நேற்று மதியம் தமிழகம் முழுவதும் உள்ள ஆதரவற்றோர் இல்லம், முதியோர் இல்லங்களில் சுமார் 1 லட்சம் பேருக்கு மதிய உணவு இலவசமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதுதவிர திருமணத்திற்கு வந்திருந்த விருந்தினர்களுக்கும் அறுசுவை உணவுடன் விருந்து வைத்து அசத்தி உள்ளனர்.
இந்நிலையில், நயன்தாராவின் திருமணத்திற்கான செலவு எவ்வளவு ஆனது என்கிற தகவல் வெளியாகி ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது. அதன்படி இவர்களது திருமணத்திற்கான ஆடை அணிகலன்கள் முதல் உணவு வரை மொத்தம் ரூ.20 கோடி செலவானதாக கூறப்படுகிறது. இதிலும் அவர்களுக்கு லாபம் தான், எப்படியென்றால் இவர்களது திருமணத்தை படமாக்கும் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூ.25 கோடி கொடுத்து வாங்கி இருக்கிறதாம். எப்படி பார்த்தாலும் இந்த திருமணம் மூலம் நயன் - விக்கி ஜோடிக்கும் ரூ.5 கோடி லாபம் தான்.
இதையும் படியுங்கள்... vignesh shivan : நயன்தாராவின் செல்லப்பெயர்களை வெளியிட்ட விக்னேஷ் சிவன்... என்ன லிஸ்ட் ரொம்ப பெருசா போகுது