காத்திருப்பில் விடுதலை...நடுக்காட்டில் சிக்கி தவிக்கும் படக்குழு?

Kanmani P   | Asianet News
Published : Jun 09, 2022, 08:22 PM IST

வருடக்கணக்கில் நடைபெற்று வரும் விடுதலை படப்பிடிப்பு தளத்தில் உள்ள ஊழியர்களுக்கு தகுந்த பாதுகாப்பு இல்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

PREV
14
காத்திருப்பில் விடுதலை...நடுக்காட்டில் சிக்கி தவிக்கும் படக்குழு?
viduthalai shooting spoot

முன்னணி நடிகர்களுக்கு நண்பனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர் சூரி. இவர் தற்போது நாயகனாக நடித்து வருகிறார். விடுதலை என பெயர் இடப்பட்டுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி, கௌதம் வாசுதேவ மேனன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் சிறப்பு தோற்றத்தில் வருகின்றனர். சமீபத்தில் தனது படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக விஜய் சேதுபதி பகிர்ந்த புகைப்படங்கள் வைரலாகின. அதன்படி இதில் மக்கள் செல்வன் போராளியாக நடித்திருப்பதாக செய்திகள் பரவி வருகிறது.

24
viduthalai shooting spoot

தனது செட்யூலை முடித்து கொண்டு பாலிவுட் பக்கம் பரந்த விஜய் சேதுபதி மீதமுள்ள பேஜ் ஒர்க்கிற்காக  மீண்டும் விடுதலை படப்பிடிப்பு தளத்திற்கு திரும்புவதாக தகவல் சொல்கிறது. தேசிய விருது பெற்ற தனுஷின் அசுரன் படத்தை இயக்கிய வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தை எல்ரெட் குமார் என்பவர் தயாரித்து வருகிறார்.

34
viduthalai shooting spoot

இளையராஜா இசையமைப்பில் உருவாகும் இந்த படத்தில் சூரி போலீசாக நடிக்கிறார். மலைவாழ் மக்கள் மற்றும் காவல்துறைக்கு இடையேயான பிரச்சனை குறித்த மைய கருவை கொண்டுள்ள இதில் நாயகியாக பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ நடித்து வருகிறார். இந்த படம் வருடக்கணக்கில் படப்பிடிப்பில் உள்ளது. பல முறை ஒத்தி வைக்கப்பட்ட விடுதலை தற்போது இறுதி படப்பிடிப்பை எட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் படத்தின் ரிலீஸ் குறித்த எந்த தகவலும் இதுவரை இல்லை.

44
viduthalai

மலைவாழ் மக்கள் தொடர்பான கதை என்பதால் திண்டுக்கல் சிறுமலை அருகே அடர்ந்த காட்டிற்குள் மிகப்பெரிய கிராமம் போன்ற செட் அமைக்கப்பட்டுள்ளதாம். இதில் 200 க்கும் மேற்பட்ட சினிமா ஊழியர்கள் பணிபுரிந்து வருவதாக சொல்லப்படுகிறது. பொதுவாக இதுபோன்ற விஷ ஜந்துக்கள் நிறைந்த பகுதியில் படப்பிடிப்பு நடைபெறும் பட்சத்தில் அங்கு வேலை செய்யும் ஊழியர்களுக்கு தகுந்த பாதுகாப்பு உபகாரங்கள் கொடுக்கப்பட வேண்டும் . ஆனால் கிட்டத்தட்ட 1 மாதத்திற்கு மேலாக நடைபெறும் 'விடுதலை' படப்பிடிப்பில் உள்ள சினிமா தொழிலாளர்களுக்கு மருத்துவ உதவி கூட போதுமான அளவு இல்லை என கூறப்படுகிறது. ரத்தம் உறிஞ்சும் அட்டை, விலங்கு உன்னி போன்ற பூச்சி கடிகளுக்கு இடையே படக்குழு தவிப்பதாக வெளியாகும் செய்திகள் வைரலாகி வருகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories