காதலனை கரம்பிடிக்க மதம் மாறிய நாயகிகள் லிஸ்டில் இடம் பிடித்த நயன்தாரா!

Kanmani P   | Asianet News
Published : Jun 09, 2022, 07:49 PM IST

நாயகிகள் பலரும் இன்டெர்க்காஸ்ட் திருமணம் செய்து கொள்வது வழக்கமான ஒன்றாகி விட்டது அந்த வரிசையில் தற்போது நயன்தாராவும் இணைந்துள்ளார்.

PREV
14
காதலனை கரம்பிடிக்க மதம் மாறிய நாயகிகள் லிஸ்டில் இடம் பிடித்த நயன்தாரா!
actress nagma

90 களில் பிரபல முன்னணி நடிகையாக இருந்தவர் நக்மா. கார்த்தியுடன் இவர் நடித்த பல படங்கள் ஹிட் அடித்துள்ளன. பிஸ்தா படம் இன்றளவும் பிரபலம். இவர் பெற்றோர்கள் கலப்பு திருமணம் செய்து கொண்டவர்கள். ஆனால் இவரோ தாயின் இஸ்லாம் மதத்திற்கும் மாறாமல்,  தந்தை இந்து மதத்திலும் சேராமல் கிருஸ்துவ மதத்தை சேர்ந்த தொழிலதிபரை காதலித்து கரம் பிடித்தார். திருமணத்திற்காக காதலன் மதத்திற்கு மாறினார் நக்மா.

24
actress kushboo

ஒல்லி பெல்லியான் நடிகைகள் மத்தியில் புசுபுசு அழகின் மூலம் ரசிகர்களை ஈர்த்தவர் குஷ்பு. பிரபு, கார்த்தி, சத்யராஜ், ரஜினி, கமல் என திரை உலக உச்ச நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்தவர் குஷ்பூ. பிறப்பால் முஸ்லீம் மதத்தை சேர்ந்தவர் இவர் இயக்குநர் சுந்தர் சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்காக முஸ்லிமிலிருந்து இந்து மதத்திற்கு மாறினார்.

34
actress Jyothika

தனது அக்காவான நக்மாவைப் போலவே ஜோதிகாவும் கலப்பு திருமணம் செய்திக்கு கொண்டார். சூர்யாவுடன் பல படங்களில் இணைந்து நடித்துள்ள ஜோதிகாவிற்கும் - சூர்யாவுக்கும் இடையே காக்க காக்க படப்பிடிப்பு தளத்தில் காதல் மலர்ந்ததாக சொல்லப்படுகிறது. பின்னர் இந்து மதத்திற்கும் மாறிய இவர் சூர்யாவை பாரம்பரிய முறைப்படி கரம் பிடித்தார். 

44
Nayanthara Vignesh shivan wedding

இன்டெர்க்காஸ்ட் திருமணம் செய்து கொண்ட  முன்னணி நடிகைகளின் லிஸ்டில் தற்போது நயன்தாராவும் இணைந்து விட்டார். முன்னதாக கிருஸ்துவ மதத்தை சேர்ந்த நயன்தாரா தனது முன்னாள் காதலனான பிரபு தேவாவை மணமுடிக்கும் பொருட்டு இந்து மதத்திற்கு மாறினார். பின்னர் அந்த காதல் முறிவடைந்ததை அடுத்தும் இந்து மதத்தையே பின்பற்றிய இவர் தற்போது விக்னேஷ் சிவனை மந்திரங்கள் முழங்க இந்து முறைப்படி  கரம் பிடித்தார்.

Read more Photos on
click me!

Recommended Stories