பீஸ்ட் நாயகியிடம் அத்துமீறிய இண்டிகோ விமான ஊழியர்..புகார் கொடுத்த பூஜா ஹெக்டே!

Kanmani P   | Asianet News
Published : Jun 09, 2022, 06:22 PM IST

ஊழியர் தன்னிடம் வெளிப்படுத்திய விதம் பயங்கரமாக இருந்ததாகவும், அதனால் அதை தெரிவிக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால் இந்த பதிவை வெளியிடுவதாகா கூறியுள்ளார்.

PREV
14
பீஸ்ட் நாயகியிடம் அத்துமீறிய இண்டிகோ விமான ஊழியர்..புகார் கொடுத்த பூஜா ஹெக்டே!
pooja hegde

சமீபத்தில் வெளியான பீஸ்ட் ரசிகர்களை  ஈர்த்திருந்தது. நெல்சன் இயக்கிய  படத்தில் தெலுங்கு பிரபலமான பூஜா ஹெக்டே நடித்திருந்தார். இவர் தமிழில் ஜீவா நாயகனாக நடித்த முகமூடி படத்தில் நாயகியாக நடித்திருந்தார். இந்த படம் மூலம் தான் பூஜா ஹெக்டே அறிமுகமானார். கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த படம் நாயகி நாயகிக்கு தமிழில் வாய்ப்பை பெற்று தரவில்லை. 

24
pooja hegde

பாலிவுட் நாயகி போன்ற தோற்றத்தை கொண்ட பூஜா முகமூடிக்கு பிறகு தெலுங்கு பக்கம் சென்றார். அங்கு இவருக்கு வரிசையாக பட வாய்ப்புகள் கிடைத்தன. ஒரே வருடத்தில் இரு படங்களில் நடித்த இவருக்கு பாலிவுட்டிலும் வாய்ப்பு கிட்ட அங்கும் பிரபலமானார். அடுத்தடுத்த படங்களில் நடித்து முன்னணி நாயகியான இவர் சமீபத்தில் வெளியான பீஸ்ட் மூலம் மீண்டும் தமிழில் என்ட்ரி கொடுத்தார்.

34
pooja hegde

படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் நாயகிக்கு இங்கு மவுசு கூடிவிட்டது. அதோடு பல முன்னணி நாயகிகளை இவர் ஓரம் கட்டி விட்டதாகவும் ஒரு பேச்சுண்டு. அதற்கேற்ப சமீபத்தில் நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் மின்னும் பொன்னொளியாய் ஜொலித்திருந்தார் பூஜா. இந்நிலையில் இவரின் இன்றைய ட்வீட் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

44
pooja hegde

பூஜா ஹெக்டே தனது ட்வீட்டர் பக்கத்தில், 'தான் மும்பையிலிருந்து புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் பயணித்த போது, அதன் விமான ஊழியர் விபுல் நாகேஷ் என்பவர், தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும், அவரது திமிர் பிடித்த மற்றும் அச்சுறுத்தும் செயல்பாட்டால் தான் மிகவும் பாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். அதோடு இது போன்ற பதிவுகளை வெளியிடுவதில்லை ஆனால்,  இது மிகவும் பயங்கரமானது ' என பதிவிட்டுள்ளார். 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories