பில்லா, சாமி உள்ளிட்ட 5 சூப்பர் ஹிட் படங்களில் நடிக்க முடியாது என கூறிய அசின்! ஏன் தெரியுமா?

First Published | Jul 1, 2023, 12:33 AM IST

தமிழ் சினிமாவில் மிக குறுகிய காலத்தில் மிகவும் பிரபலமானவர் நடிகை அசின்.. 90ஸ் கிட்ஸின்  கனவு கன்னியாக வலம் வந்த இவர், சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 5 படங்களின் வாய்ப்பை வேண்டாம் என உதறி தள்ளியுள்ளார். ஏன்... என்ன காரணம்? என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.
 

பில்லா:

இயக்குனர் விஷ்ணு வரதன் இயக்கத்தில்... அஜித் நடிப்பில் கடந்த 2007-ஆம் ஆண்டு வெளியாகி,  தாறுமாறு ஹிட் அடித்த திரைப்படம் பில்லா. அஜித் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்த படத்தில், நயன்தாரா மற்றும் நமீதா ஆகியோர் அஜித்துக்கு ஜோடியாக நடித்திருந்தனர். முக்கிய கதாபாத்திரத்தில் பிரபு, ரஹ்மான், சந்தானம், ஆதித்யா மேனன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். யுவன் இசையில், இப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களுமே தாறுமாறு ஹிட்டடித்த நிலையில், இந்த படத்தின் நயன் கதாபாத்திரத்தில் முதலில் அசின் தான் கமிட் ஆகியுள்ளார். பிகினி டைப்பில் ட்ரெஸ் போடமாட்டேன் என கூறி, இந்த படத்தில் இருந்து அதிரடியாக வெளியேறியுள்ளார்.
 

ஜி:

இயக்குனர் லிங்கு சாமி இயக்கத்தில், அஜித் காலேஜ் பாய்யாக நடித்து... ஜனரஞ்சகமான காட்சிகளுடன் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜி. இந்த படத்தில் முதலில் த்ரிஷாவுக்கு பதில் அசின் தான் நடிக்க இருந்தார். ஆனால் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு எந்த வலிமையையும் இல்லை என்பது போல் சில காரணங்களை கூறி இந்த படத்தில் இருந்து விலகினார்.

எச்.வினோத் - கமல்ஹாசன் படத்தில் இணையும்... யாரும் எதிர்பார்க்காத இரு பிரபலங்கள்! அப்போ வேற லெவல் தான்!
 

Tap to resize

சச்சின்:

அசின் நடிப்பில் வெளியான படங்களில் இன்று வரை பலரது ஃபேவரட் என்றால், அது 'எம்.குமரன் சன் ஆப் மஹாலட்சுமி' படம் தான். இந்த படத்தில் இவரின் கியூட் நடிப்பை பார்த்து விட்டு, தளபதி விஜய்க்கு ஜோடியாக சச்சின் படத்தில் நடிக்க வைக்க நினைத்தார் இயக்குனர் ஜான் மஹேந்திரன். ஆனால் இந்த படத்தின் கதை தனக்கு கனெக்ட் ஆகவில்லை என இப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டார். எனினும் அதே ஆண்டில் விஜய் நடிப்பில் வெளியான 'சிவகாசி' படத்தில் நடித்திருந்தார். இந்த படம் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது.
 

சில்லுனு ஒரு காதல்:

இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில்... சூர்யா - ஜோதிகாவின் காதல் காவியமாக கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான படம் சில்லுனு ஒரு காதல். இந்த படத்தில், சூர்யாவின் முன்னாள் காதலி கதாபாத்திரத்தில், அதாவது பூமிகா நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க, அசினுக்கு வாய்ப்பு சென்றுள்ளது. ஆனால் இரண்டாவது நாயகி போன்ற ரோலில் நடிக்க விருப்பம் இல்லை என நேரடியாகவே கூறி, இந்த வாய்ப்பையும் நிராகரித்து விட்டாராம்.

ராம் சரண் மகளுக்கு தங்க தொட்டில் பரிசளித்த முகேஷ் அம்பானி..! விலை மட்டும் இவ்வளவா?
 

சாமி:

இயக்குனர் ஹரி இயக்கத்தில், விக்ரம் - த்ரிஷா நடிப்பில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த திரைப்படம், சாமி. இந்த படத்தில் த்ரிஷாவுக்கு முன்னர் இயக்குனர் ஹரி அசினைதான் அணுகியுள்ளார். அந்த நேரத்தில் விக்ரம் கொடுத்திருந்த கால் ஷீட் டைமில், அசின் பிசியாக மற்ற படங்களில் நடித்து கொண்டிருந்ததால், அரைமனதுடன் இப்பட வாய்ப்பை மறுக்க, அது த்ரிஷாவுக்கு சென்று, அவரது திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய மைல் ஸ்டோனாக அமைந்தது.

Latest Videos

click me!