Adipurush
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் பிரபாஸ், பாகுபலி என்கிற பிரம்மாண்ட வெற்றிப்படத்தை கொடுத்த பின்னர் பான் இந்திய நடிகராக உருவெடுத்தார். பாகுபலி படத்துக்கு பின்னர், அவர் நடித்த படங்கள் அனைத்தும் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாக்கப்படுவதோடு, பான் இந்தியா அளவில் ரிலீசும் செய்யப்படுகிறது. ஆனால் பாகுபலி படம் ஏற்படுத்திய தாக்கமும், அப்படத்திற்கு கிடைத்த வரவேற்பும் அதன்பின் அவர் நடித்த படங்களுக்கு கிடைக்கவில்லை.
Adipurush
பாகுபலி படத்திற்கு பின்னர் பிரபாஸ் நடிப்பில் சலார் மற்றும் ராதே ஷ்யாம் ஆகிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகின. இந்த இரண்டு படங்களுமே படுதோல்வி அடைந்தன. அதிலும் குறிப்பாக கடந்தாண்டு வெளிவந்த ராதே ஷ்யாம் திரைப்படம் சுமார் ரூ.100 கோடிக்கு மேல் நஷ்டத்தை சந்தித்தது. இப்படி தொடர் தோல்வியை சந்தித்து வந்த பிரபாஸ், அடுத்ததாக ஆதிபுருஷ் படத்தின் மூலம் கம்பேக் கொடுத்துவிடலாம் என ஆவலோடு காத்திருந்தார்.
Adipurush
ஆனால் இம்முறையை அவருக்கு எதிர்பார்த்த ரிசல்ட் கிடைக்கவில்லை. ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடித்த ஆதிபுருஷ் திரைப்படம், கடந்த ஜூன் 16-ந் தேதி ரிலீஸ் ஆனது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ரிலீஸ் ஆன இப்படம் ராமாயணத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருந்தது. சுமார் 600 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் ரிலீசான முதல் நாளே கடுமையான விமர்சனங்களை சந்தித்தது.
இதையும் படியுங்கள்... முதன்முறையாக இரட்டை குழந்தைகளின் புகைப்படங்களை வெளியிட்ட சின்மயி... எவ்ளோ கியூட்டா இருக்காங்க பாருங்க
Adipurush
நெகடிவ் விமர்சனம் எதிரொலியாக ஆதிபுருஷ் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூலும் நாளுக்கு நாள் குறைந்த வண்ணம் உள்ளது. முதல்நாளில் ரூ.140 கோடி வசூலித்த இப்படம், இரண்டாம் நாளில் ரூ.100 கோடி வசூலித்து இருந்தது. மூன்றாம் நாளில் ரூ.65 முதல் 70 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படும் இப்படம் மொத்தமாக மூன்று நாட்களில் ரூ.300 கோடி வசூலித்து இருக்கிறது. இவற்றில் பெரும்பாலான தொகை இப்படத்தின் இந்தி மற்றும் தெலுங்கு வெர்ஷனில் இருந்து வந்தது.
Adipurush
தமிழ்நாட்டை பொறுத்தவரை ஆதிபுருஷ் திரைப்படத்தின் வசூல் அதள பாதாளத்தில் உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இப்படம் மூன்று நாட்களில் தமிழ்நாட்டில் வசூலித்த மொத்த தொகையே ரூ.3 கோடி தானாம். ஆதிபுருஷ் திரைப்படம் திரையிடப்படும் தியேட்டர்களில் ஒரு சீட் மட்டும் அனுமனுக்காக ஒதுக்கப்படும் என ரிலீஸுக்கு முன்பே படக்குழு அறிவித்து இருந்தது. ஆனால் ரிலீஸுக்கு பின் தமிழ்நாட்டில் உள்ள தியேட்டர்களில் எல்லாமே அனுமனுக்கு ஒதுக்கட்டுள்ளது போல் தியேட்டரில் கூட்டமே இல்லாமல் காத்துவாங்கி வருகிறதாம். இதனால் இப்படமும் பிரபாஸின் கெரியரில் மிகப்பெரிய தோல்வி படமாக அமைய அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... சிம்பு, விஷால் உள்பட 5 நடிகர்களுக்கு ரெட் கார்டு! அதிரடி ஆக்ஷனில் இறங்கிய தயாரிப்பாளர் சங்கம் - பின்னணி என்ன?