KGF 2 : ‘கே.ஜி.எஃப் 2’ படம் பார்த்து மெர்சலான இயக்குனர் ஷங்கர்... ‘பெரியப்பா’ அனுபவம் வேறலெவல் என புகழாரம்

Published : May 17, 2022, 01:51 PM ISTUpdated : May 17, 2022, 01:53 PM IST

KGF 2 : யாஷ் நடித்துள்ள கே.ஜி.எஃப் 2 படத்தை பார்த்த பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர், டுவிட்டர் வாயிலாக படக்குழுவுக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். 

PREV
14
KGF 2 : ‘கே.ஜி.எஃப் 2’ படம் பார்த்து மெர்சலான இயக்குனர் ஷங்கர்... ‘பெரியப்பா’ அனுபவம் வேறலெவல் என புகழாரம்

யாஷ் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான கே.ஜி.எஃப் திரைப்படம் சர்ப்ரைஸாக வந்து மாபெரும் வெற்றியை பெற்றது. பிரசாந்த் நீல் இயக்கியிருந்த இப்படத்தின் இரண்டாம் பாகம் அண்மையில் வெளியானது. இதில் யாஷுடன் ஸ்ரீநிதி ஷெட்டி, பிரகாஷ் ராஜ், சரண், ஈஸ்வரி ராவ், சஞ்சய் தத், மாளவிகா அவினாஷ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.

24

பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகி இருந்த இப்படம் கடந்த மாதம் தமிழ் புத்தாண்டு தினத்தன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் பான் இந்தியா படமாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைகளில் வெளியிடப்பட்டது. முதல் பாகத்தை மிஞ்சும் வகையில் பிரம்மிப்பூட்டும் காட்சிகளுடன் தயாராகி இருந்த இப்படம் அனைத்து மொழிகளிலும் அமோக வரவேற்பை பெற்றது.

34

இப்படம் 25 நாட்களிலேயே 1200 கோடிக்கு மேல் வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் கெத்து காட்டியது. இப்படத்துக்கு போட்டியாக ஏராளமான படங்கள் வெளியானபோதிலும் அதையெல்லாம ஓரங்கட்டிவிட்டு ஒரு மாதத்திற்கும் மேலாக வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகிறது இப்படம். ரசிகர்களைப் போல் திரைப்பிரபலங்களும் இப்படத்தை பாராட்டி வருகின்றனர்.

44

அந்த வகையில், பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் கே.ஜி.எஃப் 2 படத்தை பார்த்து டுவிட்டர் வாயிலாக படக்குழுவுக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது : ஒருவழியாக கே.ஜி.எஃப் 2 படத்தை பார்த்துவிட்டேன். கதை சொன்ன விதம், திரைக்கதை, படத்தொகுப்பு ஆகியவை கட்டிங் எட்ஜ் ஸ்டைலில் இருப்பது அருமை. ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் நடக்கும் காட்சிகளை காட்டும் இண்டர் கட் ஷாட்களை பயன்படுத்தி இருப்பது துணிச்சலான முடிவு. ஆக்‌ஷன் மற்றும் வசனங்கள் சிறப்பாக ஒர்க் அவுட் ஆகியுள்ளது. யாஷ் மாஸாக இருக்கிறார். பெரியப்பா அனுபவத்தை கொடுத்ததற்காக நன்றி பிரசாந்த் நீல். ஸ்டண்ட் மாஸ்டர்களான அன்பறிவின் பங்களிப்பு அபாரம்” என பாராட்டி உள்ளார்.

இதையும் படியுங்கள்... Rowdy Baby : தனுஷின் யூடியூப் சேனல் முடக்கம்... ரவுடி பேபி பாடலும் ஹேக் செய்யப்பட்டதால் அப்செட் ஆன ரசிகர்கள்

Read more Photos on
click me!

Recommended Stories