கோலிவுட்டுக்கு டாடா காட்டிவிட்டு ராஜமவுலி பட ஹீரோஸை டார்கெட் செய்யும் ஷங்கர்... அடுத்த படம் யாருடன் தெரியுமா?

Published : May 17, 2022, 12:00 PM ISTUpdated : May 17, 2022, 12:01 PM IST

Director shankar : ராம்சரண் நடிப்பில் உருவாகும் ஆர்.சி 15 படத்தை இயக்கி வரும் ஷங்கர், அடுத்ததாக இயக்க உள்ள படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. 

PREV
14
கோலிவுட்டுக்கு டாடா காட்டிவிட்டு ராஜமவுலி பட ஹீரோஸை டார்கெட் செய்யும் ஷங்கர்... அடுத்த படம் யாருடன் தெரியுமா?

தமிழ் திரையுலகில் ரஜினி, கமல், விஜய் போன்ற முன்னணி நடிகர்களை வைத்து பிரம்மாண்ட படங்களை இயக்கியதன் மூலம் இந்திய அளவில் பாப்புலர் ஆனவர் இயக்குனர் ஷங்கர், இவர் இயக்கத்தில் கடைசியாக எந்திரன் 2.0 திரைப்படம் வெளியானது. ரஜினி நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான இப்படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது.

24

இதையடுத்து கமலின் இந்தியன் 2 படத்தை இயக்கி வந்தார் ஷங்கர். இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் கடந்த 2020-ம் ஆண்டு கிரேன் விழுந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்ததை அடுத்து நிறுத்தப்பட்ட ஷூட்டிங் இன்று வரை தொடங்கப்படவில்லை. இடையே ஷங்கருக்கும், லைகா நிறுவனத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் இப்படத்தை கிடப்பில் போட்டுவிட்டார் ஷங்கர்.

34

இதையடுத்து ராம்சரணுடன் கூட்டணி சேர்ந்த ஷங்கர், அவர் நடிப்பில் உருவாகும் ஆர்.சி 15 படத்தை இயக்கி வருகிறார். தில் ராஜு தயாரிக்கும் இப்படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடித்து வருகிறார். திரு ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

 

44

இந்நிலையில், இயக்குனர் ஷங்கர் அடுத்ததாக இயக்க உள்ள படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் உடன் ஷங்கர் கூட்டணி அமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது கொரட்டலா சிவா இயக்க உள்ள படத்திற்கு தயாராகி வரும் ஜூனியர் என்.டி.ஆர்., அப்படத்தில் நடித்து முடித்த பின்னர் ஷங்கர் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்... ‘தலைவர் 169’ படத்துக்கு வந்த புது சிக்கல்.. ரஜினிக்கு பிரபல நடிகை நோ சொன்னதால் ஹீரோயினை தேடி அலையும் நெல்சன்

Read more Photos on
click me!

Recommended Stories