நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான அண்ணாத்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் தான் அடுத்ததாக நடிக்க உள்ள படத்தின் கதையை கவனமாக தேர்வு செய்து வந்தார் நடிகர் ரஜினிகாந்த். அதன்படி அவருக்கு கார்த்திக் சுப்புராஜ், தேசிங்கு பெரியசாமி, வெங்கட் பிரபு, பால்கி என ஏராளமான இயக்குனர்கள் கதை சொல்லினர்.