Soorarai Pottru : 6 விருதுகளை தட்டி தூக்கிய சூர்யா படம்..ஆண்டுகள் கடந்தும் இன்னும் ஓயாத சாதனை

First Published May 17, 2022, 1:03 PM IST

Soorarai Pottru : கடந்த 2020 -ம் ஆண்டு வெளியான சூரரை போற்று படம் தற்போது ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் ஆறு விருதுகளை பெற்றுள்ளது.

soorarai pottru

கொங்கரா இயக்கத்தில் சூர்யா (Suriya), அபர்ணா முரளி, ஊர்வசி உள்ளிட்டோர் நடித்திருந்த இத்திரைப்படம் சூரரை போற்று கடந்தாண்டு நேரடியாக ஓடிடி-யில் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது.ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட திரைப்படம் தான் ‘சூரரைப்போற்று’ (soorarai pottru). 

soorarai pottru

தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகிய இப்படத்தை 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 12 நவம்பர் 2020 அன்று அமேசான் பிரைம் வீடியோ மூலம் படம் டிஜிட்டல் முறையில் வெளியிடப்பட்டது . இது மலையாளம் மற்றும் கன்னடத்தில் டப்பிங் செய்யப்பட்ட பதிப்புகளுடன் ஒரே நேரத்தில் அதே தலைப்பில் வெளியிடப்பட்டது மற்றும் தெலுங்கில் ஆகாசம் நீ ஹட்டு ராஎன்ற பெயரில் வெளியிடப்பட்டது. உதான் என்ற இந்தி மொழிமாற்றம் 4 ஏப்ரல் 2021 அன்று வெளியிடப்பட்டது.

soorarai pottru

 78வது கோல்டன் குளோப் விருதுகளில் சிறந்த வெளிநாட்டுத் திரைப்படப் பிரிவின் கீழ் திரையிடப்படும் பத்து இந்தியத் திரைப்படங்களில் ஒன்றாக இது தேர்ந்தெடுக்கப்பட்டது . மேலும் இந்தத் திரைப்படம் 93வது அகாடமி விருதுகளில் திரையிடப்பட்டது. ஆனால் பரிந்துரைக்கப்படவில்லை. இந்தத் திரைப்படம் ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவின் பனோரமா பிரிவிலும் நுழைந்துள்ளது. 

soorarai pottru

இந்த படம் தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. சுதா கொங்காரா இயக்கும் இந்த படத்தில் அக்ஷய் குமார் நாயகனாக நடித்து வருகிறார். சூர்யாவின் 2 டி என்டர்டைன்மெண்ட் தயாரித்து வருகிறது. இந்நிலையில் சூரரை போற்று ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில், 'சூரைப் போற்று' சிறந்த தமிழ் திரைப்படம், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர், சிறந்த கலை இயக்குனர் மற்றும் ஆண்டின் சிறந்த தயாரிப்பு நிறுவனம் ஆகிய விருதுகளை வென்றது.

click me!