ராம் சரணை வைத்து இயக்குனர் ஷங்கர் இயக்கி வந்த 'கேம் சேஞ்சர்' திரைப்படம் இன்றுடன் முடிவடைந்து விட்டதாக இயக்குனர் ஷங்கர் தெரிவித்துள்ளதோடு, இந்தியன் 2 படத்தின் அப்டேட் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
இந்தியன் 2 படம் குறித்த தகவல் 2019 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட நிலையில், அடுத்தடுத்து சில பிரச்சனைகள் மற்றும் கொரோனா பெருந்தொற்று பரவியதால் இப்படத்தின் படப்பிடிப்பு பாதியிலேயே நின்றது. பின்னர் இயக்குனர் சங்கர் கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தை கைவிட்டுவிட்டு, அடுத்ததாக நடிகர் ராம் சரணை வைத்து இயக்கி வரும் கேம் சேஞ்சர் படத்தின் படப்பிடிப்பில் கவனம் செலுத்த துவங்கினார்.
மேலும் நாளை முதல், இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பில் கவனம் செலுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த இரண்டு படங்களுமே ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களாக உள்ளன. கமலஹாசன் நடிப்பில் கடைசியாக வெளியான விக்ரம் படத்தின் மெகா ஹிட் வெற்றிக்குப் பின்னர், இந்தியன் 2 படம் வெளியாக உள்ளது. அது மட்டும் இன்றி இது கமல் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற இரண்டாம் பாகம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதே போல் நடிகர் ராம்சரண் நடித்த ஆர் ஆர் ஆர் படத்தின் வெற்றிக்கு பின்னர், கேம் சேஞ்சர் படத்தில் தான் தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.