bonda mani
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், நடிகர் பெஞ்சமின் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் பிரபல காமெடி நடிகர் போண்டா மணிக்கு இரண்டு சிறுநீரகமும் செயலிழந்து விட்டதாகவும், தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெரும் அவருக்கு... திரையுலகை சேர்ந்தவர்களும், ரசிகர்களும் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என அழுது அவர் வெளியிட்ட வீடியோ படு வைரலானது.
இந்நிலையில் காமெடி நடிகர் போண்டா மணியின் மகள் இந்த ஆண்டு +2 தேர்வு எழுதிய நிலையில், 600க்கு 400 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார். தற்போது இரண்டு கிட்னியும் பாதிக்கப்பட்டு, வாரம் இருமுறை அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் செய்து கொண்டிருக்கும் நடிகர் போண்டா மணி... உடல்நலமில்லாம் இருந்தாலும், தன்னுடைய குடும்ப சூழ்நிலை காரணமாக தொடர்ந்து ஒரு சில படங்களிலும் நடித்தும் வருகிறார்.
இந்நிலையில், போண்டா மணியின் சூழ்நிலையை அறிந்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், தற்போது பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற போண்டா மணியின் மகள் சாய் குமாரியின் மேல்படிப்பு செலவு முழுவதையும் தானே ஏற்றுக் கொண்டு, அவருடைய வேல்ஸ் கல்லூரியில் அவர் படிக்க விருப்பம் தெரிவித்துள்ள பி.சி.ஏ படிக்க சீட் கொடுத்துள்ளார். இதற்கு நடிகர் போண்டா மணி மனதார நன்றி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடற்கரையை ஒட்டி... 3BHK லக்ஷுரியஸ் ஃபிளாட் வாங்கிய சமந்தா! எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ..