Pawan Kalyan Heroines
மும்பையைச் சேர்ந்த நடிகை தேவயானி, பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண் போல் இருக்கும் எதார்த்தமான அழகால் ரசிகர்களை கவர்த்திழுத்தவர். பெங்காளி மொழி படத்தில் அறிமுகமான நடிகை தேவயானி, பின்னர் மலையாள மொழி படங்களில் நடித்தார். தமிழில் 'தொட்டா சிணுங்கி' என்கிற படத்தில் அறிமுகமான தேவயானிக்கு ஜோடியாக நடிகர் பிரபுதேவாவின் சகோதரர் நாகேந்திர பிரசாத் ஹீரோவாக நடித்திருந்தார்.
இந்த படத்தை தொடர்ந்து கல்லூரி வாசல் படத்தில் நடித்தார். 2 படங்கள் நடித்தும் தமிழ் ரசிகர்கள் மனதில் இவரால் நிலையான இடத்தை பிடிக்கமுடியவில்லை. இந்த படங்களை அடுத்து தேவயானி நடிகர் அஜித்துக்கு ஜோடியாக நடித்த 'காதல் கோட்டை' திரைப்படம், இவரை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி சென்றது. மேலும் இந்த படத்திற்காக தமிழ்நாடு ஸ்டேட் பிலிம் விருதையும் பெற்றார். அதே போல் சிறந்த நடிகைக்கான ஃபிலிம் சார் விருதும் இவருக்கு வழங்கப்பட்டது.
மனோ பாலாவின் இறுதி நாட்கள்... அப்பாவை சாப்பிட வைக்க பாட்டு பாடிய மகன் ஹரிஷ்! கண் கலங்க வைக்கும் வீடியோ!
இந்த படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் அதிக ஆதிக்கம் செலுத்த துவங்கினார் தேவியானி. அந்த வகையில் இவர் குடும்ப குத்து விளக்காகவும், அதிகம் கவர்ச்சி காட்டாத கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடித்தது தனக்கான தனி அடையாளத்தை ஏற்படுத்தினார்.
அஜித், விஜய், விக்ரம், பிரசாந்த், என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த தேவயானி இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து கடந்த 2001 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் திரையுலகில் இருந்து விலகிய தேவயானி, சின்னத்திரையில் கவனம் செலுத்த துவங்கினார். இவர் சின்ன திரையில் நாயகியாக நடித்த கோலங்கள் சீரியல் மிகப்பெரிய ஹிட் அடித்தது. ஆறு வருடங்களுக்கு மேல் இந்த சீரியல் ஒளிபரப்பானது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தேவயானி மகள் இனியா இந்த ஆண்டு 12-ம் வகுப்பு தேர்வு எழுதி இருந்த நிலையில், அவரின் மதிப்பெண் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இனியா 600 க்கு 498 மதிப்பெண்கள் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. தொடர்ந்து ரசிகர்கள் தேவயானியின் மகளுக்கு தங்களின் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.