Aishwarya Shankar: முதல் பத்திரிகை முதல்வருக்கு... மகளின் இரண்டாவது திருமண வேலைகளை தடபுடலாக தொடங்கிய ஷங்கர்

Published : Mar 29, 2024, 08:14 AM ISTUpdated : Mar 29, 2024, 08:16 AM IST

பிரபல இயக்குனர் சங்கர் மூத்த மகளான ஐஸ்வர்யாவுக்கு கிரிக்கெட் வீரருடன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற திருமணம் கருத்து வேற்பாட்டால் முடிவுக்கு வந்த நிலையில், உதவி இயக்குனரை ஐஸ்வர்யா இரண்டாவது திருமணம் செய்யவுள்ளார். இதனையடுத்து முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து இயக்குனர் சங்கர் அழைப்பிதழ் கொடுத்துள்ளார்.

PREV
14
Aishwarya Shankar: முதல் பத்திரிகை முதல்வருக்கு... மகளின் இரண்டாவது திருமண வேலைகளை தடபுடலாக தொடங்கிய ஷங்கர்

விவகாரத்தில் முடிந்த திருமணம்

பிரபல இயக்குனர் சங்கர் அவர்களுக்கு ஐஸ்வர்யா, அதிதி என்ற இரண்டு மகள்களும், அர்ஜித் என்ற ஒரு மகனும் உள்ளனர். இதில் மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கு கடந்த 2021 ஆம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் திருமணம் நடைபெற்றது. புதுச்சேரியை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ரோகித் தாமோதரனுடன் திருமணம் நடைபெற்றது. கொரோனா சமயத்தில் நடந்த இந்தத் திருமணத்தில் குறைவான உறவினர்களே கலந்து கொண்டனர். 

24

பாலியல் புகார்- கணவன், மனைவி கருத்து வேறுபாடு

அடுத்த ஒரு சில மாதங்களில் ரோகித் தாமோதரன் நடத்தும் கிரிக்கெட் பயிற்சி மையத்தில் பெண் வீராங்கனைகளிடம் தவறாக நடந்து கொண்டதாக புகார் எழுந்ததையடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதன் காரணமாக ஐஸ்வர்யாவுக்கும் ரோஹித்திற்கும் இடையே கருத்து வேற்பாடு ஏற்பட்டது. இதையடுத்து, ஐஸ்வர்யா ரோஹித்திடம் இருந்து விவாகரத்து பெற்றார். அன்று முதல் ஐஸ்வர்யா தனது தந்தையுடன் தங்கியுள்ளார்.

34
Actress Aditi Shankar

ஐஸ்வர்யாவிற்கு இரண்டாவது திருமணம்

இந்தநிலையில், உதவி இயக்குனர் தருண் கார்த்திகேயனுடன் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கு இரண்டாம் திருமணம் நடைபெறவுள்ளது. இதற்கு முன்னதாக  ஐஸ்வர்யா - தருண் ஜோடியின் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படங்களை இயக்குனர் ஷங்கரின் இரண்டாவது மகள் அதீதி வெளியிட்டிருந்தார். தருண் கார்த்திகேயன் உதவி இயக்குனர் மட்டுமல்ல. மேலும் பாடலாசிரியர் மற்றும் பின்னணி பாடகரும் ஆவார்.
 

44

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அழைப்பு

இந்நிலையில், இன்று இயக்குனர் ஷங்கர் தனது மனைவி ஈஸ்வரியுடன், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் துர்கா ஸ்டாலின் ஆகியோரை சந்தித்து தனது மகளின் திருமண அழைப்பிதழை வழங்கினார். 

இதையும் படியுங்கள்

"என் உலகமே இவங்க இரண்டு பேர் தான்".. சகோதிரியின் திருமணம்.. மெழுகு சிலை போல தயாரான அதிதி - வைரல் பிக்ஸ்!

click me!

Recommended Stories