தனுஷை தொடர்ந்து... செல்வராகவனும் விவாகரத்து செய்யப்போகிறாரா? தத்துவ பதிவால் குழம்பிப்போன ரசிகர்கள்

Published : Dec 28, 2022, 08:31 AM IST

தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற இயக்குனராக உள்ள செல்வராகவன், டுவிட்டரில் போட்டுள்ள தத்துவ பதிவு ஒன்று, ரசிகர்களை குழப்பமடைய செய்துள்ளது.

PREV
15
தனுஷை தொடர்ந்து... செல்வராகவனும் விவாகரத்து செய்யப்போகிறாரா? தத்துவ பதிவால் குழம்பிப்போன ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் செலவராகவன். காதல் கொண்டேன் படம் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன என தொடர்ந்து பல்வேறு வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். இருப்பினும் சமீபகாலமாக இவர் இயக்கிய படங்கள் தொடர்ந்து தோல்வியை தழுவி வருகின்றன.

25

இதன்காரணமாக டைரக்‌ஷனுக்கு சற்று ரெஸ்ட் விட்டு தற்போது நடிப்பில் பிசியாக இறங்கி உள்ளார் செல்வராகவன். அந்த வகையில் இந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான அவர், அருண் மாதேஸ்வரனின் சாணிக் காயிதம் படம் மூலம் கதையின் நாயகனாக எண்ட்ரி கொடுத்தார். தற்போது இவர் நடிப்பில் பகாசூரன் என்கிற திரைப்படம் தயாராகி உள்ளது.

35

திரெளபதி, ருத்ரதாண்டவம் போன்ற படங்களை இயக்கிய மோகன் ஜி தான் இப்படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தின் டிரைலர் கூட சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இவ்வாறு இயக்குனராக மட்டுமின்றி நடிகராகவும் தொடர்ந்து தன் திறமையை நிரூபித்து வரும் செல்வராகவன் டுவிட்டரில் அவ்வப்போது தத்துவ பதிவுகள் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

இதையும் படியுங்கள்... தென்காசி சாலையில் பைக் ரைடிங் செய்த அஜித்... சேஸ் பண்ணி வந்து ரசிகர்கள் எடுத்த வேறலெவல் வீடியோ இதோ

45

அந்த வகையில் நேற்று அவர் டுவிட்டரில் பதிவிட்டிருந்த பதிவு மிகவும் வைரல் ஆகி உள்ளது. அதில், “தனியாகத்தான் வந்தோம். தனியாகத்தான் போவோம். நடுவில் என்ன துணை வேண்டி கிடக்கிறது? துணை என்பது கானல் நீர். நெருங்க நெருங்க தூரம் ஓடும்” என பதிவிட்டு இருந்தார் இயக்குனர் செல்வராகவன்.

55

இதைப்பார்த்த ரசிகர்கள், அவருக்கு மீண்டும் விவாகரத்து ஆகிவிட்டதா? என கேள்வி எழுப்பி வருகின்றனர். ஏற்கனவே முதலாவதாக நடிகை சோனியா அகர்வாலை திருமணம் செய்து விவாகரத்து பெற்ற செல்வராகவன், அடுத்ததாக கீதாஞ்சலி என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், அவர் போட்டுள்ள இந்த தத்துவ பதிவு, ஒருவேளை அவர் இரண்டாவது மனைவியையும் விவாகாரத்து செய்துவிட்டாரோ என்கிற கேள்வியை தான் ரசிகர்கள் மனதில் எழச்செய்துள்ளது.

இதையும் படியுங்கள்... அதிரடியாக பிக்பாஸ் வீட்டிற்குள் வருவாரா ரக்ஷிதாவின் கணவர்? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

Read more Photos on
click me!

Recommended Stories