தென்னிந்திய திரையுலகில் கிட்டத்தட்ட 19 வருடங்களாக ரசிகர்களை தன்னுடைய அழகால், வசீகரித்து வரும் நடிகை த்ரிஷா 'பொன்னியின் செல்வன்' படத்தின் சூப்பர் ஹிட் வெற்றிக்குப் பின்னர், மீண்டும் தன்னுடைய பழைய இடத்தை பிடித்து விட்டது போல் மிகவும் எனெர்ஜிடிக்காக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
சமீப காலமாக இவர் முன்னணி ஹீரோக்களுக்கு, ஹீரோயினாக நடிக்கும் படங்களை விட, கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கும் படங்களையே அதிகம் தேர்வு செய்து நடித்து வருகிறார். ஆனால் இப்படி இவர் நடித்து வந்த படங்கள் படு தோல்வியை சந்தித்ததால், இவரின் மார்க்கெட் சரசரவென குறைந்தது.
இந்த திரைப்படத்திற்குப் பின்னர் இவருடைய மார்க்கெட் பல மடங்கு எகிறி உள்ள நிலையில், இவன் நடிப்பில் அடுத்ததாக 'ராங்கி' திரைப்படம் வரும் 30ஆம் தேதி வெளியாக உள்ளது.
தற்போது ராங்கி படத்தின் பிரமோஷன் பணிகளில் கவனம் செலுத்தி வரும் த்ரிஷா, அப்போபோது சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது சிவப்பு நிற உடையில், செம ஸ்டைலிஷாக நடிகை த்ரிஷா இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வேறு லெவலுக்கு ரசிகர்கள் மத்தியில் பார்க்கப்பட்டு வருகிறது.