பிக்பாஸ் 6 ஆவது சீசன் தற்போது 80-வது நாளை நெருங்கி வருகிறது. இதில் பங்கேற்ற பெரும்பாளான போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில், 10 போட்டியாளர்கள் இன்னும் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கின்றனர். இவர்களில் ஒருவர் விஜய் டிவி சீரியல்கள் மூலம் பிரபலமான ரச்சிதா மகாலட்சுமி. ஆரம்பத்தில் இருந்தே தன்னுடைய ஸ்டைலில் ஆடி வரும் ரச்சிதாவுக்கு நிறைய ரசிகர்களும் உள்ளனர். பொதுவாக ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கும் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு மத்தியில், தன்னை நோக்கி வந்த ராபர்ட் என்கிற பிரச்னையை சாமர்த்தியமாக ஓவர் டேக் செய்து அசத்தலாக விளையானார்.
ரச்சிதா தன்னுடைய கனவுகள் குறித்து பிக்பாஸ் தொடக்கவிழாவிலேயே பேசி இருந்த நிலையில், தற்போது அவருடைய குடும்ப பின்னணி பற்றி உருக்கமாக பேசியுள்ளார். அதில் அவர், தனக்கு படிப்பு பெரிதாக வரவில்லை என்றும், தான் கூட்டு குடும்பத்தில் இருந்ததால் தன் பெற்றோருக்கு நிறைய நெருக்கடி ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார். அப்போது ஒருமுறை, தான் நன்றாக படிக்காததால் தன்னை தன் பெற்றோர் பல முறை அடித்துள்ளதாகவும், கழுத்தை நெரித்து நீ செத்துவிடு என சொல்லி மிரட்டியதாகவும் கூறியுள்ளார்.
ஆனால் இன்று தன்னுடைய நிலையை பார்த்து எல்லோரும் பெருமை படுவதாகவும், தன் மீது அதீத நம்பிக்கை வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தான் உயிர் இருக்கும் வரை அம்மாவை சிறந்த முறையில் பார்த்துக் கொள்வேன் என அவர் பேசியதை கேட்டு பிக்பாஸ் வீட்டில் அனைவரும் உருகி விட்டனர்.
Bb tamil 6
இதேபோல் தனக்கு குழந்தை பேறு இல்லாதது குறித்தும் ரச்சிதா உருகியுள்ளார். இதற்கு பிறகு தன்னுடைய வாழ்க்கையில் என்ன நடக்குமென்று எனக்கு சத்தியமாக தெரியாது. குழந்தை அமைப்பு இருக்கின்றதா என்றும் எனக்கு தெரியாது. என் அம்மா தான் எனக்கு குழந்தை. அந்த கடவுள் அந்த குழந்தையை என்னோடு கடைசி வரைக்கும் கொடுக்க வேண்டும். அந்த குழந்தையை நல்லபடியா நான் பார்த்துகொள்ள வேண்டும். அதை மட்டும்தான் நான் கேட்கிறேன். என் திறமைக்கு ஆதரவாக இருந்தபோது, என் அருகிலேயே இருந்தபோதும் அவரது அருமை தெரியவில்லை. இங்கு நான் நிற்பதற்கு முழு முதல் காரணம் என் அம்மாதான். என்னோட வாழ்க்கைனா அவர் மட்டும்தான். அவருடைய அருமை தெரிய ஆரம்பிக்கும்போதுதான் பிக்பாஸ் வாய்ப்பு வந்தது. இதற்கு பிறகு எனக்கு நீ, உனக்கு நான் என்று வாழ விரும்புகிறேன் என கண்ணீர் விட்டு ரச்சிதா உருகி இருந்தார்.
ஆனால் இதுவரை ரக்ஷிதா பிக்பாஸ் வீட்டிற்குள் தன்னுடைய கணவர் குறித்து பெரிதாக பேசிக்கொண்டது இல்லை. ஆனால் அவருடைய கணவர் தங்கள் இருவருக்கும் இடையே சிறிய பிரச்சனை தான்... கண்டிப்பாக அது சரியாகிவிடும் என பேசி இருந்தார். இவருடைய பேச்சில் இருந்து மீண்டும் ரக்ஷிதாவுடன் வாழ ஆசைப்படுவது தெரிந்தது. மேலும் ரக்ஷிதாவுக்கு வெளியில் இருந்து சப்போர்ட் செய்து யாரும் இவர், தற்போது நடந்து வரும் ஃபிரீஸ் டாக்ஸ் மூலம் ரக்ஷிதாவின் அம்மாவுடன் சேர்ந்து வீட்டிற்குள் செல்வாரா? என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஒருவேளை அப்படியே உள்ளே வந்தால் இவர்கள் இருவருக்குள்ளும் இருக்கும் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்குமா? என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.