இதன்பின் இவர் நடிப்பில் வெளியான கில்லி, திருப்பாச்சி, சிவகாசி, துப்பாக்கி, வேட்டைக்காரன், கத்தி, மெர்சல், தெறி என அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் ஹிட் படங்களைக் கொடுத்து தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக உயர்ந்துள்ளார் விஜய். இவருக்கான ரசிகர்கள் பட்டாளமும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.