அமிதாப் பச்சன், சூர்யா என பாலிவுட் முதல் கோலிவுட் வரை பல்வேறு முன்னணி நட்சத்திரங்களின் படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் ராம் கோபால் வர்மா. ஆனால் சமீப காலமாக இவருக்கு மவுசு குறைந்துவிட்டதால், முன்னணி நடிகர்களை விட்டுவிட்டு, கவர்ச்சி நடிகைகளை வைத்து ஆபாச படங்களை இயக்கும் லெவலுக்கு சென்றுவிட்டார்.
இவ்வாறு சர்ச்சைக்கு பெயர்போன இயக்குனராக உருவெடுத்துள்ள ராம் கோபால் வர்மா, தற்போது டேஞ்சரஸ் என்கிற லெஸ்பியன் கதையம்சம் கொண்ட படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தை ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர் படத்துக்கு போட்டியாக வெளியிட உள்ளதாக சீன் போட்டு மொக்கை வாங்கிய ராம்கோபால் வர்மா, தற்போது மீண்டும் அதன் வெளியீட்டு பணிகளில் பிசியாக இறங்கி உள்ளார்.