Director Nelson : விஜய்க்காக நெல்சன் எடுத்த புதிய அவதாரம்.... பீஸ்ட் புரமோஷனில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்

Published : Apr 01, 2022, 10:49 AM IST

Director Nelson : கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பீஸ்ட் படத்தின் இசை வெளியீட்டு விழா நடத்தப்படவில்லை. அதற்கு பதிலாக நடிகர் விஜய் பங்கேற்ற நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றை நடத்தி முடித்துள்ளனர். 

PREV
16
Director Nelson : விஜய்க்காக நெல்சன் எடுத்த புதிய அவதாரம்.... பீஸ்ட் புரமோஷனில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்

வேட்டை மன்னன் டிராப்

விஜய் டிவி நிகழ்ச்சிகளில் பணியாற்றி வந்த நெல்சன், கடந்த 2010-ம் ஆண்டு சிம்புவை வைத்து வேட்டை மன்னன் என்கிற படத்தை தொடங்கினார். விறுவிறுப்பாக தொடங்கி நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு சில பிரச்சனைகள் காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டு, படமும் கைவிடப்பட்டது. இதனால் கடும் பின்னடைவை சந்தித்த நெல்சன், அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்காமல் தவித்து வந்தார். இதையடுத்து மீண்டும் விஜய் டிவிக்கே சென்ற நெல்சன், அங்கு ஜோடி நம்பர் 1, சூப்பர் சிங்கர், பிக்பாஸ் போன்ற ஹிட்டான நிகழ்ச்சிகளை இயக்கி வந்தார். 

26

முதல் படமே ஹிட்

வேட்டை மன்னன் படம் டிராப் ஆன பின்னர், சுமார் 7 ஆண்டுகள் எந்த படங்களும் இயக்காமல் இருந்த நெல்சனுக்கு அனிருத் மூலம் கோலமாவு கோகிலா படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்ட நெல்சன், முதல் படத்திலேயே நயன்தாராவை நடிக்க வைத்து பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தார்.  

36

ரூ.100 கோடி வசூல் அள்ளிய டாக்டர்

இதையடுத்து தனது நெருங்கிய நண்பனான சிவகார்த்திகேயனை, வைத்து டாக்டர் படத்தை இயக்கினார் நெல்சன். பிரியங்கா மோகன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, அர்ச்சனா, தீபா, இளவரசு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த இப்படம் கடந்தாண்டு வெளியாகி ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து பிரம்மாண்ட வெற்றியை ருசித்தது. 

46

பீஸ்ட்டில் விஜய்யுடன் கூட்டணி 

டாக்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கும் வாய்ப்பு நெல்சனுக்கு கிடைத்தது. இப்படத்தை செம்ம மாஸாக இயக்கி முடித்துள்ள நெல்சன், தற்போது அப்படத்தின் ரிலீஸ் பணிகளில் பிசியாக உள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் 13-ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் ரிலீசாக உள்ளது.

56

தொகுப்பாளரான நெல்சன்

பீஸ்ட் படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது வேகமெடுத்துள்ளன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பீஸ்ட் படத்தின் இசை வெளியீட்டு விழா நடத்தப்படவில்லை. அதற்கு பதிலாக நடிகர் விஜய் பங்கேற்ற நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றை நடத்தி முடித்துள்ளனர். இந்நிகழ்ச்சி வருகிற ஏப்ரல் 10-ந் தேதி ஒளிபரப்பாக உள்ளது.

66

இந்நிலையில், சமீபத்திய தகவல்படி, இந்த நேர்காணல் நிகழ்ச்சியை இயக்குனர் நெல்சன் தான் தொகுத்து வழங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் அவர் நடிகர் விஜய்யிடம் பல்வேறு சுவாரஸ்யமான கேள்விகளை கேட்டதாக கூறப்படுகிறது. நெல்சனின் இந்த புதிய அவதாரத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

இதையும் படியுங்கள்... Beast Vijay Name : ‘பீஸ்ட்’ படத்தில் நடிகர் விஜய்க்கு இரண்டு பெயர்! அட.. ரெண்டுமே சூப்பரா இருக்கே...!

Read more Photos on
click me!

Recommended Stories