இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்த லாஸ்லியா, தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டதன் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.
பிக்பாஸ் 3-வது சீசனில் பரபரப்பாக பேசப்பட்ட போட்டியாளர் என்றால் அது லாஸ்லியா தான், ஏனெனில் அவருக்கு கவினுக்கு இடையேயான காதல் விவகாரம் அந்த சீசனில் ஹாட் டாப்பிக்காக இருந்தது.
இருப்பினும் பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது கவினை உருகி உருகி காதலித்த லாஸ்லியா, வெளியே வந்ததும் அவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக பிரேக் அப் செய்து அதிர்ச்சி கொடுத்தார்.
காதல் தோல்விக்கு பின் தற்போது சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார் லாஸ்லியா, அடுத்தடுத்து படங்களில் ஹீரோயினாக நடிக்க கமிட் ஆகி பிசியான நடிகையாக உருவெடுத்து வருகிறார் லாஸ்லியா.
நடிகை லாஸ்லியா கைவசம் தற்போது, கூகுள் குட்டப்பா திரைப்படம் உள்ளது. இதில் தர்ஷனுக்கு ஜோடியாக நடித்துள்ளார் லாஸ்லியா. இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது.
இதுதவிர குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வின் உடன் இணைந்து நடிகை லாஸ்லியா ‘பேபி நீ சுகரு’ என்கிற ஆல்பம் பாடலில் ஆட்ட,ம் போட்டுள்ளார்.
லிட்டில் சூப்பர்ஸ்டார் சிம்பு வெளியிட்ட இந்த பாடல் சமூக வலைதளங்களில் செம்ம வைரல் ஆகி வருகிறது. இதற்கான புரமோஷன் நிகழ்ச்சிகளும் சமீபத்தில் நடைபெற்றன.
அதில் பச்சை நிற மாடர்ன் உடையில் தொடை தெரிய படு கவர்ச்சியாக உடையணிந்து கலந்துகொண்டார் லாஸ்லியா. அப்போது எடுத்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.