Beast Vijay Name : ‘பீஸ்ட்’ படத்தில் நடிகர் விஜய்க்கு இரண்டு பெயர்! அட.. ரெண்டுமே சூப்பரா இருக்கே...!

Published : Apr 01, 2022, 09:48 AM IST

Beast Vijay Name : பீஸ்ட் படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால் இப்படத்தின் அப்டேட்டுகளும் அடுத்தடுத்து வெளிவந்த வண்ணம் உள்ள நிலையில், தற்போது நடிகர் விஜய் நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயரும் வெளியாகி உள்ளது.

PREV
15
Beast Vijay Name : ‘பீஸ்ட்’ படத்தில் நடிகர் விஜய்க்கு இரண்டு பெயர்! அட.. ரெண்டுமே சூப்பரா இருக்கே...!

கமர்ஷியல் படம் பீஸ்ட்

நடிகர் விஜய்யின் 65-வது படத்தை நெல்சன் இயக்கி உள்ளார். பீஸ்ட் என பெயரிடப்படுள்ள இப்படம் ஆக்‌ஷன், காமெடி, ரொமான்ஸ் நிறைந்த கமர்ஷியல் படமாக தயாராகி உள்ளது. பூஜா ஹெக்டே ஹீரோயினாகவும், ஷான் டாம் சாக்கோ வில்லனாகவும் நடித்துள்ள இப்படத்தில் யோகிபாபு, செல்வராகவன், விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி, சதீஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

25

பான் இந்தியா ரிலீஸ்

பான் இந்தியா படமாக தயாராகி உள்ள பீஸ்ட் திரைப்படம் வருகிற ஏப்ரல் 13-ந் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய 5 மொழிகளில் ரிலீசாக உள்ளது. பாடல்கள் மற்றும் பின்னணி இசையை அனிருத் கவனிக்க, பிரபல ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

35

நாளை முதல் டிரைலர்

பீஸ்ட் படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால் இப்படத்தின் அப்டேட்டுகளும் அடுத்தடுத்து வெளிவந்த வண்ணம் உள்ளன. அதன்படி பீஸ்ட் படத்தின் டிரைலர் நாளை வெளியாக உள்ளது. இதற்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக படக்குழு நேற்று மாலை ஒரு புகைப்படத்தை வெளியிட்டது.

45

ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ வைரல்

நடிகர் விஜய், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ், சதீஷ் உள்ளிட்டோர் அடங்கிய பீஸ்ட் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்லான அது இணையத்தில் வெளியாகி வைரல் ஆனது. இதைப்பார்த்த ரசிகர்கள் மேலும் சில புகைப்படங்களை வெளியிடுமாறு சமூக வலைதளம் வாயிலாக வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

55

பீஸ்ட்டில் விஜய் பெயர் என்ன?

இந்நிலையில், பீஸ்ட் படத்தில் நடிகர் விஜய் வீர ராகவன் என்கிற பெயரில் நடித்துள்ளதாக இயக்குனர் நெல்சன் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். அவரை சுருக்காம வீரா என அனைவரும் அழைப்பார்கள் எனவும் அவர் கூறியுள்ளார். இதுதவிர நடிகர் விஜய் இப்படத்தில் ரா ஏஜண்டாக நடித்துள்ளதாக நெல்சன் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்... Alia Bhatt : RRR பட போட்டோஸை நீக்கியது நிஜம் தான்... ராஜமவுலி மீது கோபமா? - உண்மையை போட்டுடைத்த ஆலியா பட்

Read more Photos on
click me!

Recommended Stories