"பின்னிட்ட போ" திவ்யா துரைசாமியை நேரில் அழைத்து மனதார பாராட்டிய மிஷ்கின் - ஏன்?

Ansgar R |  
Published : Aug 24, 2024, 11:32 PM IST

Dhivya Duraisamy : பிரபல நடிகை திவ்யா துரைசாமியை நேரில் அழைத்து மனதார பாராட்டி மகிழ்ந்துள்ளார் மூத்த இயக்குனரும், நடிகருமான மிஷ்கின்.

PREV
14
"பின்னிட்ட போ" திவ்யா துரைசாமியை நேரில் அழைத்து மனதார பாராட்டிய மிஷ்கின் - ஏன்?
Actress Dhivya

பெரம்பலூரில் பிறந்து வளர்ந்த பிரபல நடிகை திவ்யா துரைசாமி, தமிழ் செய்தி நிறுவனங்களில் செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கினார். அதன் பிறகு கடந்த 2019ம் ஆண்டு தமிழில் வெளியான "இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தனது கலை உலக பயணத்தை தொடங்கினார்.

திமுக மூத்த உறுப்பினர்கள்.. செல்லமாக கலாய்த்த ரஜினிகாந்த் - ரசித்து சிரித்த முதல்வர்!

24
Dhivya Duraisamy

தொடர்ச்சியாக மதில், குற்றம் குற்றமே, எதற்கும் துணிந்தவன், சஞ்சீவன் மற்றும் ப்ளூ ஸ்டார் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்று வந்த நடிகை திவ்யா துரைசாமி, தற்பொழுது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்கேற்று அசத்தி வருகின்றார். மெல்ல மெல்ல தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகின்றார் திவ்யா என்றே கூறலாம்.

34
Vaazhai Movie Actresses

இந்நிலையில் நேற்று வெளியாகி தற்பொழுது தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வரும் இயக்குனர் மாரி செல்வராஜின் "வாழை" திரைப்படத்தில் வேம்பு என்கின்ற கதாபாத்திரத்தில் மிக நேர்த்தியாக நடித்து அசத்தியிருக்கிறார் திவ்யா துரைசாமி. இந்நிலையில் பலரும் அவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

44
Dhivya Duraisamy

இந்த நிலையில் இயக்குனரும், நடிகருமான மிஷ்கின் நடிகை திவ்யா துரைசாமி நேரில் அழைத்து அவருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். "இன்னும் நிறைய திரைப்படங்களில் நீ இதே போன்ற நல்ல நடிப்பை வெளிப்படுத்த வேண்டும். நாம் இணைந்தும் திரைப்படங்களில் தொடர்ச்சியாக பணியாற்றுவோம். மாரி செல்வராஜ் உன்னுடைய கதாபாத்திரத்தை மிக அழகாக செதுக்கியுள்ளார். அன்று மேடையில் எல்லோரையும் என்னால் தனித்தனியே பாராட்ட முடியவில்லை, அதனால் தான் இன்று உன்னை நேரில் அழைத்து பாராட்டுகிறேன்" என்று கூறி தனது வாழ்த்துக்களையும் ஆசீர்வாதங்களையும் கொடுத்துள்ளார்.

"பஞ்சமி முதல் விடாது கருப்பு வரை" 90ஸ் கிட்ஸ்களை மிரள வைத்த டாப் 4 நாடகங்கள்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories