நடிகர் விஜய் நடிப்பில் தற்போது வாரிசு திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தின் ஷூட்டிங் இன்னும் ஓரிரு நாட்களில் முடிவடைய உள்ளது. இப்படத்தில் நடித்து முடித்த பின்னர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள தளபதி 67 படத்தில் நடிக்க உள்ளார் விஜய். கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட இப்படத்தில் நடிகர் விஜய் தாதாவாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல் இந்த வில்லன் பட்டியலில் அடிபட்ட மற்றொரு பெயர் இயக்குனர் மிஷ்கின். அவரை வில்லனாக நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வந்தது. படத்தின் கதை அவருக்கு பிடித்திருந்தாலும், ஒரே ஒரு காரணத்திற்காக அப்படத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்து விலகிவிட்டாராம். ஏனெனில் இப்படத்தில் நடிக்க அதிக நாட்கள் கால்ஷீட் கேட்டார்களாம். தான் இப்படத்திற்கு கால்ஷீட் கொடுத்துவிட்டால், தான் அடுத்தாக விஜய் சேதுபதியை வைத்து இயக்க உள்ள படத்தை திட்டமிட்டபடி தொடங்க முடியாது என்பதை கருத்தில் கொண்டு தளபதி 67-ல் இருந்து விலகி விட்டாராம் மிஷ்கின்.
இயக்குனர் மிஷ்கின் தற்போது மடோன் அஸ்வின் இயக்கும் மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடித்து வருகிறார். இதுதவிர இவர் இயக்கியுள்ள பிசாசு 2 படமும் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்த இரண்டு படங்களின் பணிகளை முடித்த பின்னர் வருகிற ஜனவரி மாதம் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தை தொடங்க திட்டமிட்டுள்ளாராம் மிஷ்கின். இப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... நடிகர் கார்த்தியின் பேஸ்புக் பக்கம் முடக்கம்... ஹேக்கர்கள் பதிவிட்ட வீடியோ பார்த்து பதறிப்போன ரசிகர்கள்