Actress Ashwini: கிழக்கு சீமையிலே படத்தில் நடித்து பிரபலமான நடிகை அஷ்வினி, ஷூட்டிங் ஸ்பாட்டில் எதிர்கொண்ட பாலியல் பிரச்சனை குறித்து பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
சிறுவயதிலேயே மாடலிங் துறையில் கவனம் செலுத்த துவங்கியவர் தான் நடிகை அஷ்வினி நம்பியார். இவர் மாடலாக நடித்த பல விளம்பரங்கள் மலையாள மேகசீன்களில் வெளியானது. இதை பார்த்த பின்னரே, இவருக்கு தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
27
"புது நெல்லு புது நாத்து" அறிமுகம்
அந்த வகையில், இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கத்தில் கடந்த 1991 ஆம் ஆண்டு வெளியான "புது நெல்லு புது நாத்து" திரைப்படத்தில் நடித்தார். இவரது கதாபாத்திரம் நன்கு கவனிக்கப்பட்டது.
37
கிழக்குச் சீமையிலே
எனவே மீண்டும் பாரதிராஜா இயக்கத்தில் 1993-ஆம், விஜயகுமார், ராதிகா, நெப்போலியன், உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடிப்பில் வெளியான "கிழக்குச் சீமையிலே" படத்தில் நடித்தார் அஷ்வினி நம்பியார். 16 வயதிலேயே ஹீரோயினாக நடித்த இவரை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றது.
47
அஷ்வினி நம்பியார் திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து நடிப்பில் கவனம்
இதை தொடர்ந்து பல வருடங்கள், தென்னிந்திய மொழி படங்களில் குணச்சித்திர வேடங்களை தேர்வு செய்து நடித்து வந்த, அஷ்வினி நம்பியார் திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தினார். இந்நிலையில் கடந்த 2007-ஆம் ஆண்டு, "ஓரம் போ" என்கின்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
57
சூழல் வெப் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்:
தற்போது சமீபத்தில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான, சூழல் வெப் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதே போல் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்.
67
அஷ்வினி நம்பியார் பேட்டி
இந்நிலையில், அஷ்வினி நம்பியார் கொடுத்துள்ள பேட்டி ஒன்றில், தனக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த மோசமான அனுபவம் குறித்து பேசியுள்ளார். ஒருமுறை தன்னுடைய அம்மா இல்லாமல் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்றபோது, இயக்குனர் என்னை மேலே உள்ள ஒரு அறைக்கு அழைப்பதாக கூறினார்கள்.
77
இயக்குனரால் நேர்ந்த பிரச்சனை
அப்போது நான் சின்ன பொண்ணு. எதார்த்தமாக இயக்குனரை பார்க்க சென்றேன். அந்த பிரபல இயக்குனர் என்னை உள்ளே அழைத்தார். பின்னர் திடீர் என தகாத முறையில் நடந்து கொண்டார். அவர் அப்படி நடந்து கொள்வார் என நான் எதிர்பார்க்கவில்லை. விறுவிறு என கீழே இறங்கி, வீட்டுக்கு சென்று விட்டேனே என கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.