தமிழ் சினிமாவில், ஒரே மாதிரியான கதைகளை இயக்கி போர் அடிக்க செய்யாமல்... கால மாற்றத்திற்கு ஏற்றாப்போல்.. இளைஞர்கள் ரசனைக்கு ஏற்ப படங்களை இயக்கி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்து வருபவர் இயக்குனர் மணிரத்னம்.
சுமார் 20 வருடங்களுக்கு மேலாக... இப்படத்தை இயக்க முயற்சி செய்து வந்த மணிரத்தினம் ஒரு வழியாக இந்த ஆண்டு இப்படத்தை இயக்கி முடித்துவிட்டார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் போஸ்ட் புரோடக்ஷன் பணிகளில், மணிரத்னம் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். அதே போல் இப்படத்தில் நடித்துள்ள நடிகர்கள் ஒவ்வொருவராக தங்களது டப்பிங் பணிகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
ஆனால் இது குறித்து தற்போது வெளியாகியுள்ள தகவலில், மணிரத்னம் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், இவருக்கு கொரோனா பரிசோதனை செய்து பார்த்ததில் நெகடிவ் என வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே தற்போது காய்ச்சல் மற்றும் உடல் சோர்வுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். விரைவில் உடல்நலம் தேறி... மீண்டும் பொன்னியின் செல்வன் பட பணிகளில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.