samantha ruth prabhu : லேடி ‘ரோலெக்ஸ்’ ஆகிறார் சமந்தா... தளபதி 67-ல் விஜய்க்கு வில்லியாக மிரட்டப்போகிறாராம்

Published : Jul 19, 2022, 01:51 PM IST

Samantha : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 67 படத்தில் நடிகர் விஜய்க்கு வில்லியாக நடிகை சமந்தா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

PREV
14
samantha ruth prabhu : லேடி ‘ரோலெக்ஸ்’ ஆகிறார் சமந்தா... தளபதி 67-ல் விஜய்க்கு வில்லியாக மிரட்டப்போகிறாராம்

கோலிவுட் முதல் பாலிவுட் வரை முன்னணி நடிகர்கள் பலருக்கும் பேவரைட் இயக்குனராக மாறிவிட்டார் லோகேஷ் கனகராஜ். இதற்கு காரணம் இவரின் படங்கள் தான். இதுவரை இவர் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என நான்கு படங்களை இயக்கி உள்ளார். அந்த நான்கு படங்களுமே பிளாக்பஸ்டர் ஹிட் ஆகிவிட்டன. அதிலும் குறிப்பாக கடைசியாக இவர் இயக்கத்தில் வெளியான விக்ரம் படம் ரூ.440 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

24

இதனால் இவரது இயக்கத்தில் நடிக்க முன்னணி நடிகர்கள் போட்டிபோட்டு வருகின்றனர். ஆனால் இவர் கைவசம் தற்போது தளபதி 67, விக்ரம் 2, கைதி 2, இரும்புக்கை மாயாவி என நான்கு படங்கள் உள்ளன. இதில் அவர் முதலில் விஜய் நடிக்க உள்ள தளபதி 67 படத்தை இயக்க உள்ளாராம். இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இதையும் படியுங்கள்... இரவின் நிழல் வெற்றியால்.. அடுத்த படத்திற்காக மிகப்பெரிய ரிஸ்க் எடுக்க துணிந்த பார்த்திபன் - அது என்ன தெரியுமா?

34

தற்போது நடிகர் விஜய் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் முடிந்த பின்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளாராம் விஜய். தளபதி 67 படத்தில் நடிகை சமந்தாவும் நடிக்க உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அவரது கேரக்டர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

44

அதன்படி நடிகை சமந்தா இப்படத்தில் வில்லி கேரக்டரில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விக்ரம் படத்தில் இடம்பெற்ற ரோலெக்ஸ் சூர்யாவின் கேரக்டரைப் போல் இதுவும் செம்ம மாஸான கேரக்டராக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகை சமந்தா ஏற்கனவே தி பேமிலி மேன் வெப் தொடரில் வில்லியாக நடித்திருந்தாலும், அவர் படத்தில் வில்லியாக நடிப்பது இதுவே முதன்முறை என கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... ஐஸ்வர்யா ராய், நயன்தாரா, பிரபாஸ்.. முக்கிய பிரபலங்களின் ஆதார் மற்றும் பாஸ்போட் போடோஸை பார்த்திருக்கீங்களா?

Read more Photos on
click me!

Recommended Stories