வலிமை (Valimai) படத்துக்கு பின் அஜித்தின் (Ajith) 61-வது படத்தை இயக்க உள்ள எச்.வினோத் (H Vinoth), அது முற்றிலும் வேறுபட்ட கதையம்சம் கொண்டதாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றிக்கு பின் அஜித் - எச்.வினோத் இரண்டாவது முறையாக இணைந்துள்ள படம் வலிமை. போனி கபூர் தயாரித்துள்ள இப்படம் அதிரடி ஆக்ஷன் கதையம்சம் கொண்ட படமாக தயாராகி உள்ளது.
27
இப்படத்தில் நடிகர் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தாயாராகி வருகிறது. அடுத்தாண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையையொட்டி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
37
இப்படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு மாதமே எஞ்சியுள்ளதால், படத்தை புரமோட் செய்யும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
47
இந்நிலையில், வலிமை படத்தின் கதை வேறு ஒரு ஹீரோவுக்காக எழுதியது என்று இயக்குனர் எச்.வினோத் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
57
முதலில் இதில் போலீஸ் கதாபாத்திரம் இல்லாமல் இருந்ததாகவும், அஜித் படத்தில் இணைந்தவுடன் தான் சிறிய மாற்றம் செய்து போலீஸ் கதாபாத்திரத்தை சேர்த்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
67
இருப்பினும் வலிமை படத்தின் கதை எந்த ஹீரோவுக்காக எழுதப்பட்டது என்பது குறித்த தகவலை இயக்குனர் எச்.வினோத் வெளியிடவில்லை.
77
மேலும் வலிமை படத்துக்கு பின் அஜித்தின் 61-வது படத்தை இயக்க உள்ள எச்.வினோத், அது முற்றிலும் வேறுபட்ட கதையம்சம் கொண்டதாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.