Biggboss Amir: பிக்பாஸ் அமீருக்கு இப்படி ஒரு கொடுமை நடக்க கூடாது.. இவரின் சோகமான கதையை கேட்டு ஷாக்கான ரசிகர்க

Published : Dec 18, 2021, 06:13 PM IST

பிக்பாஸ் சீசன் 5 (Biggboss tamil 5)  நிகழ்ச்சி தற்போது பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில், இதில் வயல் கார்டு போட்டியாளராக உள்ள அமீரின் (Amir) வாழ்க்கை கதை குறித்த தகவல் வெளியாகி அனைவரையுமே கலங்க வைத்துள்ளது.  

PREV
17
Biggboss Amir: பிக்பாஸ் அமீருக்கு இப்படி ஒரு கொடுமை நடக்க கூடாது.. இவரின் சோகமான கதையை கேட்டு ஷாக்கான ரசிகர்க

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தற்போது 70 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இன்னும் நிகழ்ச்சி முடிவடைய சில தினங்களே உள்ளதால்... அடுத்தடுத்த வாரங்கள் வெளியேற உள்ளது யார்? வெற்றியாளர் யார்? என்பதையும் பிக்பாஸ் ரசிகர்கள் கணிக்க துவங்கிவிட்டனர்.

 

27

கடந்த வாரம் இரண்டு எலிமினேஷனுக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில் இமான் அண்ணாச்சி மட்டுமே வெளியேறினார். மேலும் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து அபிநய் வெளியேற வாய்ப்புள்ளதாககூறப்டுகிறது .

 

37

போட்டியாளர்கள் எண்னிக்கை குறைந்து கொண்டே வருவதால்... போட்டிகளும் கடுமையாகி கொண்டே செல்கிறது. மேலும் கடந்த 2 வாரங்களுக்கு முன், நடிகர் விஜயின் நண்பரும், நடிகருமான சஞ்சய் மற்றும் டான்ஸ் கோரியோ கிராப்பர் அமீர் ஆகியோர் வயல் கார்டு போட்டியாளராக உள்ளே வந்தார்.

 

47

இவர் ஒரு டான்ஸ் கோரியோ கிராப்பர் என்பதும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல நடன நிகழ்ச்சிகளுக்கு இவர் நடன மாஸ்டராக பணியாற்றியுள்ளார் என்பதும் அனைவரும் அறிந்ததே... ஆனால் இவரை பற்றி யாருக்கும் தெரியாத தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

 

57

அதாவது அமீர் ஒருவயது இருக்கும் போதே அவரது தந்தையை இழந்து விட்டாராம். இவரையும், இவரது சகோதரரையும் இவர் தாய் தான் வளர்த்து வந்துள்ளார். ஆனால் அமீருக்கு 10 வயது இருக்கும் போது யாரோ அவரது அம்மாவையும் கொலை செய்துவிட, இவரும் இவருடைய சகோதரரும் ஆதரவு இன்றி அனாதையாக நின்றுருள்ளனர்.

 

67

பின்னர் ஆதரவற்றோர் இல்லத்தில் தான் அமீரும் அவரது சகோதரரும் வளர்த்துள்ளனர். சிறிய வயதில் இருந்தே நடனத்தின் மீது அமீருக்கு ஆர்வம் இருந்ததால், அவரது தாய் ஆசை படியே நடன இயக்குனராக மாறியுள்ளார். இந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது.

 

 

77

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் தற்போது கலந்து கொண்டுள்ளதால், இவரது வாழ்க்கை பற்றிய கதை தற்போது வெளியாகியுள்ளது. அதே நேரம் இவரது வாழ்க்கையில் நடந்த சோகம் பலரையும் கலங்க வைத்துள்ளது.

 

 

Read more Photos on
click me!

Recommended Stories