AR Murugadoss :மீண்டும் ஃபார்முக்கு வந்த ஏ.ஆர்.முருகதாஸ்! அடுத்தடுத்து 2 டாப் ஹீரோக்களின் படங்களை இயக்குகிறார்

First Published | Apr 6, 2022, 9:58 AM IST

AR Murugadoss : கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக படம் இயக்காமல் இருந்து வந்த ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது தனது அடுத்த பட வேலைகளை தொடங்கி உள்ளார். 

அஜித் நடிப்பில் கடந்த 2001-ம் ஆண்டு வெளியான தீனா படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஏ.ஆர்.முருகதாஸ். முதல் படத்திலேயே வெற்றிகண்ட இவர் அடுத்ததாக விஜயகாந்த் நடித்த ரமணா படத்தை இயக்கினார். இப்படமும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதை அடுத்து சூர்யாவை வைத்து கஜினி படத்தை இயக்கினார். இப்படமும் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது.

இவ்வாறு அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து ஹாட்ரிக் வெற்றியை ருசித்த ஏ.ஆர்.முருகதாஸ், குறுகிய காலத்திலேயே முன்னணி இயக்குனர் என்கிற அந்தஸ்தை பெற்றார். இதன்பின் பாலிவுட்டுக்கு சென்ற ஏ.ஆர்.முருகதாஸ், அங்கு கஜினி படத்தை ரீமேக் செய்து வெற்றி கண்டார். இவர் அடுத்தடுத்து வெற்றிகளை குவித்து வந்த அவருக்கு கடந்த 2011-ம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு திரைப்படம் சறுக்கலை தந்தது,


இதனையடுத்து விஜய்யை வைத்து துப்பாக்கி படத்தை இயக்கி, மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பினார் ஏ.ஆர்.முருகதாஸ். இப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. அடுத்ததாக விஜய்யை வைத்து இவர் கத்தி, சர்கார் போன்ற படங்களும் ஹிட் அடித்தன. பின்னர் ரஜினியின் தர்பார் படத்தை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ், அதன்பின்னர் விஜய்யின் 65-வது படத்தை இயக்க ஒப்பந்தமானார்.

இதற்கான ஆரப்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்த சமயத்தில் தயாரிப்பு தரப்புடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அப்படத்தில் இருந்து விலகினார். இதையடுத்து அந்த வாய்ப்பு இயக்குனர் நெல்சனுக்கு சென்றது. இந்த கூட்டணியில் தான் தற்போது பீஸ்ட் திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படம் வருகிற ஏப்ரல் 13-ல் திரைகாண உள்ளது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக படம் இயக்காமல் இருந்து வந்த ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது தனது அடுத்த பட வேலைகளை தொடங்கி உள்ளார். அதன்படி அவர் அடுத்ததாக இரண்டு படங்களை இயக்க உள்ளதாகவும், ஒன்றில் நடிகர் விக்ரமும், மற்றொன்றில் நடிகர் விஜய் சேதுபதியும் ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் விக்ரம் நடிக்கும் படத்தை தான் அவர் முதலாவதாக இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தின் கதை இதுதானா? - ரிலீசுக்கு முன்பே லீக்கானதால் ரசிகர்கள் அதிர்ச்சி

Latest Videos

click me!